தாத்தா ரணில் சபைக்கு வந்தால் என்பிபி எம்.பிக்களை கதறவிடுவார்! முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு
” தாத்தா (ரணில்) நாடாளுமன்றம் வந்து ஒரு உரையாற்றினால் தேசிய மக்கள் சக்தியின் 159 பேரும் ஆட்டம் கண்டுவிடுவார்கள். அதனால்தான் ரணில் விக்கிரமசிங்க தற்போது குறிவைக்கப்பட்டுள்ளார்.” – என்று முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தேசிய மக்கள் சக்தியினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை விமர்சிப்பதில்லை. ரணில் விக்கிரமசிங்கவை குறிவைத்துதான் தாக்கிவருகின்றனர். அவரது வெளிநாட்டு பயணம் பற்றிகூட பேசுகின்றனர். தற்போது பட்டலந்த அறிக்கை கையிலெடுக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் ரணில் விக்கிரமசிங்கதான் தற்போதைய அரசுக்கு பெரும் சவாலாகும். அவர் நாடாளுமன்றம் சென்று ஒரு உரையாற்றினால் தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் ஆட்டம் கண்டுவிடுவார்கள்.
ரணில் விக்கிரமசிங்கவால்தான் இந்நாட்டை மீட்க முடியும். ரணிலை தாத்தா என விமர்சிக்கின்றனர். ஆனால் அந்த தாத்தாவைதான் தற்போது குறிவைத்துள்ளனர்.” – என்றார்.

கருத்துகள் இல்லை: