Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சிறப்பாக நடைபெற்ற முடிந்த காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி...


காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (25.04.2025) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்தன.


பாடசாலையின் அதிபர் திருமதி. முஸர்ரபா ஹக்கீம் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம் பெற்றதோடு நிகழ்வின் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜுத் (SLAS) அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.


கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் திட்டமிடல் உதவி கல்வி பணிப்பாளரும் காத்தான்குடி கோட்டக்கல்வி பணிப்பாளருமான ஜனாப். AGM ஹக்கீம் (SLEAS) அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உத்தியோகத்தர்களான ஜனாப். SLHM. இனாமுல்லாஹ் (இணைப்பாளர் - சிறுவர் மெய்வல்லுனர்), ஜனாப். ULM.பைறூஸ் (ஆசிரியர் ஆலோசகர்-விஞ்ஞானம்), திருமதி தஸ்லிமா றிஸ்வி (ஆசிரிய ஆலோசகர் -ஆரம்பப் பிரிவு) தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஜனாப்.ALM. றிஸ்வி, தொழிநுட்ப உத்தியோகத்தர் ஜனாப். MMA. ஹலீம் உட்பட காத்தான்குடி கோட்டப் பாடசாலையின் அதிபர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.


இதன் போது, பெரு விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றிக் கேடயங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் (ஆண், பெண் இருபாலரும்) தெரிவு செய்யப்பட்ட சம்பியன்களுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இல்ல அலங்காரம் மற்றும் அணிநடை ஆகியவற்றின் சாம்பியன்களாக சபயர் இல்லம் தெரிவு செய்யப்பட்டதுடன் சிறந்த சின்னம் வடிவமைப்பிற்கான சம்பியனை றூபி இல்லம் தனதாக்கிக் கொண்டது.


நீல நிற இல்லமான சபயர் இல்லம் பனிப் பிரதேச வீடான Igloo அமைப்பிலும் சிவப்பு நிற இல்லமான றூபி இல்லம் கப்பல் அமைப்பிலும் பச்சை நிற இல்லமான எமரல்ட் இல்லம் பச்சைக் கிளி அமைப்பிலுமாக தமது இல்ல வெளிப்பாடுகளை வெளிப்படுத்திருந்தமை எல்லோரது பாராட்டையும் பெற்றிருந்தது.


இந்நிகழ்வானது மிகச் சிறப்பாக அமைந்திருந்ததோடு மூன்று இல்லங்களும் வெவ்வேறு விதமான சிறந்த கற்பனை ஆக்க வடிவங்களை கொண்டு இல்லங்களை அமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


ஆரம்ப பிரிவு மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்ததுடன் பெண் மாணவிகளின் அணிநடை மரியாதை நிகழ்வும் பார்வையாளர்களின் அதிக பாராட்டுகளைப் பெற்றது.


மேற்படி பல்வேறு அம்சங்கள் கொண்டதாக நடைபெற்ற 2025 ஆம் ஆண்டின் இல்ல விளையாட்டு போட்டி இறுதி முடிவுகளின் அடிப்படையில்
Champion - Ruby
1st Runner Up - Emerald
2nd Runner Up - Sapphire
ஆகியன வெற்றி வாகை சூடிக் கொண்டன.














சிறப்பாக நடைபெற்ற முடிந்த காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி... Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 28, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.