டான் பிரியசாத் கொலை: மூவர் கைது!
டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து டான் பிரியசாத்மீது நேற்றிரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டேன் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தவதற்காக பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டான் பிரியசாத் கொலை: மூவர் கைது!
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 23, 2025
Rating:

கருத்துகள் இல்லை: