காத்தான்குடி மின்சார சபைக்கான காணி நிறந்தரமாக ஒப்படைப்பு.
காத்தான்குடி மின்சார சபைக்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் தாய் சேய் பராமரிப்பு நிலையம் நடத்தப்பட்டு வந்தது. மின்சார சபை பயன்பாட்டுக்காக இந்த கட்டிடம் வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தபோதும் இக் கட்டிடம் MOHனால் விடுவிக்கப்படாமல் இருந்தது.
இதனை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் நகர முதல்வர் SHM . அஸ்பர் JP அவர்களால் மேற்கொள்ளப்பட்டு 09.06.2025 திங்கள்கிழமை இன்று நகர முதல்வர் அலுவலகத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முன்னிலையில் காத்தான்குடி சுகாதார வைத்திய அத்தியட்சகர் Dr நஸ்ருதீன் அவர்களால் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மொளஜூத் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 6 மாதங்களில் இந்த கட்டிடம் மின்சார சபையினால் திருத்தம் செய்யப்பட்டு மின்சார சபையின் பிராந்திய காரியாலயமாக இயங்கவுள்ளது.
காத்தான்குடி மின்சார சபைக்கான காணி நிறந்தரமாக ஒப்படைப்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 09, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 09, 2025
Rating:


கருத்துகள் இல்லை: