காத்தான்குடி நகர சபை முதல்வர் எஸ்.எச்.எம் அஸ்பர் தலைமையில் விஷேட கலந்துரையாடல்
காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் உலக வங்கி நிதி ஒதுக்கீட்டில் நடைபெறுகின்ற வீதி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் காத்தான்குடி நகர சபை முதல்வர் எஸ்.எச்.எம் அஸ்பர் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பங்கேற்போடு காத்தான்குடி நகர சபையில் இன்று (09) இடம்பெற்றது.
பாலமுனை கர்பலா வீதி, டீன் வீதி, ALS மாவத்தை வீதி, கடற்கரை வீதி அல் அக்ஸா பள்ளி வீதி, பூநொச்சிமுனை பள்ளி வீதி, மத்திய வீதி, CTB வீதி, தக்வா பள்ளி வீதி, கடற்கரை வீதியை அகலப்படுத்துவதுடன் வேலைத்திட்டங்களை விரைவாக ஆரம்பிப்பதோடு, அனைத்து வேலைத்திட்டங்களையும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன் முடிக்கப்படவேண்டும் எனவும் ஒப்பந்ததாரருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
அதேபோல், காத்தான்குடியில் உள்ள அனைத்து வட்டாரத்திலும் செப்பனிடப்படவேண்டிய வீதிகள் தொடர்பாகவும் இங்கு நகர சபை உறுப்பினர்களினால் பிரஸ்தாபிக்கப்பட்டது
இந்நிகழ்வில், காத்தான்குடி பிரதேச செயலாளர், காத்தான்குடி நகர சபை செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்திக்கு பொறுப்பான தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், நகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
- ஊடகப்பிரிவு.
காத்தான்குடி நகர சபை முதல்வர் எஸ்.எச்.எம் அஸ்பர் தலைமையில் விஷேட கலந்துரையாடல்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 09, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 09, 2025
Rating:





கருத்துகள் இல்லை: