2026 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை 2025 ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதன் இரண்டாம் வாசிப்பு (வரவு செலவுத்திட்ட உரையை) 2025 நவம்பர் மாதத்தில் நடாத்துவதற்கும், மூன்றாம் வாசிப்பின் வரவு செலவுத்திட்ட விவாதத்தை 2025 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடாத்துவதற்கு இயலுமாகும் வகையில் 2026 நிறுவனங்கள் மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு சரியான வகையில் ஒப்பந்தங்களை மேற்கொண்டு பொதுவான விநியோகச் சங்கிலி மூலம் விநியோகிப்பதற்கு சிரமமாகவுள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரங்களை விநியோகிப்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
"உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் அனைவரையும் பொருளாதார அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்தல்" எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 2026-2030 அரச நிதிச் சட்டகம் மற்றும் அரச நிதி மூலோபாயக் கூற்று மற்றும் தேசிய கொள்கைச் சட்டகமான "செழிப்பான நாடு அழகான வாழ்வு எனும் கொள்கைச் சட்டகத்திற்கமைய 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது தேசிய கொள்கைச் சட்டகத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ள முன்னுரிமைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தித் தொடக்க முயற்சிகளுக்கு முன்னுரிமையளிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய அமைச்சுக்களின் விடயதானங்களின் கீழ் அந்தந்த அமைச்சுக்கள் அடையாளங் கண்டுள்ள கருத்திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியொதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு அனைத்து அமைச்சுக்களிடமிருந்தும் முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை: