அம்பாறையில் காதலியைக் கழுத்தறுத்து கொலை செய்த காதலன் தானும் தற்கொலை
இளம் பெண்ணைக் கழுத்தறுத்துக் கொலை செய்து அவரது பெற்றோரை வெட்டிப் படுகாயப்படுத்திய இளைஞர் தனது கழுத்தை அறுத்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தப் பயங்கரச் சம்பவம் அம்பாறை மாவட்டம், பதியத்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரங்கல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண், அவரது காதலன் எனக் கூறப்படும் இளைஞரால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன் பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் தனது காதலி எனப்படும் இளம் பெண்ணின் வீட்டுக்குப் பிரவேசித்த இளைஞர், அந்தப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டார்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹாஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் 23 வயதான சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலையைச் செய்த இளைஞர் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பதியத்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 23, 2025
Rating:

கருத்துகள் இல்லை: