போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பதற்கான விசேட தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன..
நாட்டிலிருந்து போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக இலங்கை பொலிஸார் மற்றும் இராணுவம் அண்மையில் (04) விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் .
இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து செயற்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜா-எல, கந்தானை, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் அண்மையில் செயல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் விளைவாக, சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் நாடு முழுவதும் செயல்படுத்த எதிர்பார்த்துள்ள இந்த விசேட தேடுதல்களுக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பதற்கான விசேட தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன..
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 06, 2025
Rating:

கருத்துகள் இல்லை: