மட்டக்களப்பு மாவட்டத்தில் எய்ட்ஸ் தடுப்பு குறித்த ஒருங்கிணைந்த கலந்துரையாடல்
எய்ட்ஸ் (AIDS) தடுப்புடன் தொடர்புடைய பல்வேறு துறைசார்ந்தவர்களிடமிருந்து ஆலோசனைகளையும் கருத்துகளையும் பெற்று, எதிர்காலத்திற்கான செயற்பாடுகளைத் திட்டமிடும் நோக்குடன் ஒரு முக்கியக் கலந்துரையாடல் 03.07.2025, வியாழக்கிழமையன்று பணிமனையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட எய்ட்ஸ் தடுப்புக் குழுவின் தலைவரும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்,
HIV பரவல் இளைஞர்களிடமே அதிகமாகக் காணப்படுவதால், இளைஞர்களிடையே இதற்கான விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், ஆரம்ப கட்ட இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதன் அவசியம் குறித்தும், பாடசாலை ஆசிரியர்களுக்கு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், அவர்கள் வழியாக மாணவர்களிடையே இந்த நோய் குறித்த அறிவையும், தடுப்பு முறைகளையும் கொண்டுசேர்ப்பது பற்றியும் உடனடிச் செயற்பாடுகளாக விவாதிக்கப்பட்டதுடன். துறைசார் அதிகாரிகளினால் அதற்குரிய ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும் பேசப்பட்டது.
சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய பாலியல் நோய் தொடர்பான விழிப்புண்வுகளை குறிப்பாக சுற்றுலாவிடுதிகனின் பணியாளர்களுக்கு ஏற்படுத்துவது. பாதுகாப்பான பாலியல் உறவு என்பதை சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட அனைத்துத்தரப்பினர்களுக்கும் கொண்டு செல்வது என்பதோடு, பாதுகாப்பான பாலியலுக்கான ஆணுறைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுத் பொது இடங்களை விளப்பரப்படுத்தவது போன்ற விடயங்களும் ஆராயப்பட்டது.
மாவட்ட எய்ட்ஸ் குழுவின் செயலாளரும் எயிற்ஸ் தடுப்பு வைத்திய நிபுணருமான Dr. டி.கே.ஜே. தான்த்ரீ அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலினை . பிராந்திய பாலியல் நோய்தடுப்புபிரிவு Dr. டி. திவாகரன் அவர்கள் வழிநடத்தியிருந்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிகாரிகள், பிராந்திய ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள், கல்வித் திணைக்கள உயரதிகாரிகள், பல்கலைக்கழக அதிகாரிகள், படைத்துறை அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் என மட்டக்களப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரச உயரதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எய்ட்ஸ் தடுப்பு குறித்த ஒருங்கிணைந்த கலந்துரையாடல்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 06, 2025
Rating:

கருத்துகள் இல்லை: