காத்தான்குடி ஜம்இய்யாவின் ஏற்பாட்டினில் முஅத்தீன்களுக்கான செயலமர்வு
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் தஃவாப் பிரிவினால் காத்தான்குடி, காத்தான்குடியைச் சூழவுள்ள பிரதேச பள்ளிவாயல்களில் கடமை புரியும் முஅத்தீன்களுக்காக செயலமர்வு ஜம்இய்யாவின் பதில் தலைவர் அஷ் ஷேய்க் MI அப்துல் கபூர் (மதனி) BA அவர்களின் தலைமையில் ஜம்இய்யாவின் காரியாலய மண்டபத்தில் (07.07.2025 திங்கட்கிழமை) காலை 8.30 மணி தொடக்கம் 10.30 மணி மிக சிறப்பாக நடைபெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளையின் தஃவாப் பிரிவின் செயலாளர் அஷ் ஷேய்க் MMM இல்ஹாம் (பலாஹி) BA அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந் நிகழ்வினை ஜம்இய்யாவின் செயலாளர் அஷ் ஷேய்க் MIM ஜவாஹிர் (பலாஹி) BA அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து முஅத்தீன்களின் சிறப்புகளும் அவர்களது பணிகளும் தொடர்பாக ஜம்இய்யாவின் பதில் தலைவர் அஷ் ஷேய்க் MI அப்துல் கபூர் (மதனி) BA அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து ஜம்இய்யாவின் ஆலோசனைக் குழு உறுப்பினரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் அல்குர்ஆன் அபிவிருத்தி சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களுல் ஒருவருமாகிய அஷ் ஷேய்க் MI ஆதம் லெப்பை (பலாஹி) அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து தற்போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற அதான் நேரசூசி தொடர்பான விரிவான விளக்கத்தினை அஷ் ஷேய்க் MMM இல்ஹாம் (பலாஹி) BA அவர்கள் வழங்கியதுடன் அது தொடர்பாக முஅத்தீன்களுடைய கருத்துக்களும் பெற்றுக் கொள்ளப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அதான் இகாமத்களில் விடுகின்ற தவறுகளும் அதனைத் திருத்திக் கொள்வதற்கான இலகு வழிகாட்டல்களும் எனும் தலைப்பில் அல் ஹாபிழ் MHM றிஸ்வி அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.
முஅத்தீன் சங்கம் சார்பாக நன்றியுரை அதன் செயலாளர் அல் ஹாபில் நஜீர் அவர்கள் நிகழ்த்தியதுடன் கப்பாரதுல் மஜ்லிஸுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இந் நிகழ்வுக்கு ஜம்இய்யாவின் தலைவர் செயலாளர் உட்பட நிறைவேற்று குழு உறுப்பினர்கள் அஷ் ஷேய்க் SA. இன்ஆமுல் ஹஸன் (முப்தி), அஷ் ஷேய்க் HM. வலீத் (பலாஹி), அஷ் ஷேய்க் MMM இல்ஹாம் (பலாஹி) BA மற்றும் முஅத்தீன்கள் கலந்து சிறப்பித்தனர்.
(ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளை)
காத்தான்குடி ஜம்இய்யாவின் ஏற்பாட்டினில் முஅத்தீன்களுக்கான செயலமர்வு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 07, 2025
Rating:

கருத்துகள் இல்லை: