அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டினில் கௌரவிப்பு நிகழ்வு
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையினால் கடந்த 2025 ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் சிறுவர் பஸார் நிகழ்வினை இஸ்லாமிய நெறிமுறைகளைப் பிரதிபலிக்கும் வகையில் கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்களை ஒழுங்கமைத்து நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள்
மற்றும் நிதியுதவி வழங்கியவர்களை பாராட்டி நன்றி தெரிவித்து கௌரவிக்கும் நிகழ்வு 08.07.2025. செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிக்கு ஜம்இய்யாவின் பதில் தலைவர் அஷ் ஷேய்க் MI அப்துல் கபூர் (மதனி) BA அவர்களின் தலைமையில் ஜம்இய்யதுல் உலமா காரியாலய மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
ஜம்இய்யாவின் செயலாளர் அஷ் ஷேய்க் MIM ஜவாஹிர் (பலாஹி) BA அவர்களின் நெறிப்படுத்தல் நடைபெற்ற இந் நிகழ்வின்போது கடந்த 2025 ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் சிறுவர் பஸார் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளை
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டினில் கௌரவிப்பு நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 09, 2025
Rating:

கருத்துகள் இல்லை: