மிகச்சிறந்த ஆளுமை காத்தான்குடி ஜாமீயுள்ளாபிறீன் வித்தியாலய ஆசிரியை சபீனா ஆயிஷா டீச்சர் ஓய்வு பெறுகின்றார்.
அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் சமூகம், மாணவ சமூகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கல்வி சமூகத்தின் அன்புக்கு பாத்திரமான திருமதி சபீனா ஆயிஷா பதுர்தீன் ஆசிரியை அவர்கள் தனது 37 வருட ஆசிரியை எனும் மகத்தான சேவையிலிருந்து 10.09.2025 திகதியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.
1988.08.22 இல் தனது முதல் நியமனம் கிடைத்து காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் ஒரு துடிப்புள்ள ஆசிரியையாக 1988 முதல் தனது கற்பித்தல் ஆற்றலினை சுமார் 14 ஆண்டுகள் திறம்பட சேவை செய்துள்ளார்.
அதன் பிற்பாடு இடமாற்றம் பெற்று காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தர பாடசாலையில் 9 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.
மீண்டும் அவர் காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்திற்கு
இடமாற்றம் பெற்று அங்கு 8 வருடங்கள் சேவையாற்றி வந்த நிலையில் இறுதியாக காத்தான்குடி ஜாமியுள்ளாபிரீன்
வித்தியாலயத்தில் 6 வருடமும் 1 மாதமும் சிறப்பாக பணி செய்து அனைவரினதும் பாராட்டுக்களுடனும்,துஆ பிரார்த்தனையுடனும் தனது 37 வருடமும் 1 மாதம் என்ற காலத்தினை நிறைவு செய்து
SLTS-1 என்ற உயர்வுடன் தனது 60 வது வயதில் ஓய்வு பெறுகின்றார்.
முன்னாள் காத்தான்குடி கோட்டக் கல்விப் பனிப்பாளர் மர்ஹூம் அல்ஹாஜ் MACM.பதுர்தீன் sir அவர் களுடைய அன்பு மனைவியான இவர் நான்கு பிள்ளைகளின் தாயாவார்.
இவரின் இரண்டு பெண் பிள்ளைகளில் ஒருவர் வைத்தியர் என்பதுடன் மற்றயவர் இயன் மருத்துவருமாவார்.
ஆண் பிள்ளைகளில் ஒருவர் குடிசார் எந்திரவியல் துறையிலும் மற்றயவர் கல்விப் பொ.த.உ. தரம் கற்று வருகின்றார்.
மேலும் தனது 37 வருட சேவைக் காலத்தில் இவர் விடுமுறை பெறாது 20 வருடங்கள் பணியாற்றியுள்ளார் என அதிபர் தெரிவித்தார்.
அரசினால் வழங்கப்பட்டு வரும் "குரு பிரதீபா விருது" வழங்கி
கெளரவிக்கப்பட்ட ஒருவர் என்பதும் விசேட அம்சமாகும்.
இவரது 37 வருடகால சேவையின் பலனாக இவரிடம் கல்வி பயின்ற பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பலர் இன்று உயர் பதவிகளில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சபீனா ஆயிஷா டீச்சர் மார்க்கப் பற்று, பேணுதல் உடையவர் என்பதுடன் அன்பு, பொறுமை, , கடமை நேரத்தினில் அமானிதமாக
நடத்தல் என்ற இன்னும் பல அம்சங்களுக்கு அவர்
உரித்தானவர் என பல ஆசிரியைகள் கூறும் சான்றாகும்.
"கற்றுக் கொடுப்பவனாக இரு" என்ற இஸ்லாத்தின் போதனைக்கேற்ப
சேவையிலிருந்து ஓய்வு பெறும் சபீனாஆயிஷா பதுர்தீன் டீச்சரின் கற்பித்தல் மற்றும் இதர செயற்பாடுகள் யாவும்
அதிசிறப்பாக இருந்து வந்ததாக காத்தான்குடி மட்/மம/ஜாமீயுள்ளாபிறீன் வித்தியாலய அதிபர் Mr.ALM.Farook நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
மேலும் சபீனா ஆயிஷா டீச்சரின் ஓய்வு காலம் சிறப்பாக அமைய
பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் இதன் போது தெரிவித்துக் கொன்டார்.
(ஜசாக்குமுல்லாஹு ஹைறா)
(ஏ.ல்.டீன் பைரூஸ்
ஊடவியலாளர்)
மிகச்சிறந்த ஆளுமை காத்தான்குடி ஜாமீயுள்ளாபிறீன் வித்தியாலய ஆசிரியை சபீனா ஆயிஷா டீச்சர் ஓய்வு பெறுகின்றார்.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 09, 2025
Rating:

கருத்துகள் இல்லை: