காத்தான்குடி அல்-அக்ஷா பள்ளிவாயளுக்கு 9.95 மில்லியன் தேசிய மக்கள் சக்தியினால் ஒதுக்கீடு
காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள அல் - அக்ஷா பள்ளிவாயலினைப் பார்வையிடுவதற்காக வரும் சுற்றுலாப்பயணிகளில் குறிப்பாக அதிகளவிலான பெண்கள் தமக்கான கழிப்பறைவசதிகள் போதியளவு இன்மையால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதனைக் கருத்திற்கொண்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுற்றுலா அமைச்சினூடாக 9.95 மில்லியன் ரூபாய்களை காத்தான்குடி நகரசபைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிதி ஒதுக்கீட்டினூடாக கழிப்பறை வசதிகளோடு, பாலூட்டும் தாய்மார்களுக்கான பிரத்தியேக வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.
இதற்கான கட்டுமான வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி அல்-அக்ஷா பள்ளிவாயளுக்கு 9.95 மில்லியன் தேசிய மக்கள் சக்தியினால் ஒதுக்கீடு
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 06, 2025
Rating:

கருத்துகள் இல்லை: