பல்வித போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது
பல்வித போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைத்தல்
இலங்கையில் பொதுப் போக்குவரத்தை வினைத்திறனாகவும் முறைசார்ந்த வகையிலும் மேற்கொள்வது பற்றிய சமகால அரசின் கொள்கைக்கமைய,போக்குவரத்து மூலங்களுக்கு இடையிலான இடைத்தொடர்பு மூலம் Transit Cities மற்றும் குறித்த Transit Cities இலிருந்து பிரதான நகரத்திற்கு வினைத்திறனான பொதுப் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் தேவையான வசதிகளுடன் கூடிய பல்வித போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, பேரூந்து சேவை, புகையிரத சேவை, வாடகை வாகன சேவை போன்ற போக்குவரத்து மூலங்களுக்கு இடையிலான இடைத்தொடர்பை மேம்படுத்தும் நோக்கில் நாட்டில் அதிகளவில் பயணிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ள பேரூந்துத் தரிப்பிடங்கள் மற்றும் புகையிரத நிலையங்களை இணைப்புச் செய்து முறைசார்ந்த சாத்தியவள ஆய்வை மேற்கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் கீழ்க்காணும் பல்வித போக்குவரத்து மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பதில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை கொள்கை ரீதியாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கண்டி பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (உலக வங்கியின் நிதியிடலின் கீழ் தற்போது நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.)
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 12, 2025
Rating:

கருத்துகள் இல்லை: