உன்னிச்சை இருநூறுவில் கிராமம் தொடர்பான ஆய்வு அறிக்கை மீடியா போரம் காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமாவிடம் கையளிப்பு..
(எம்.பஹத் ஜுனைட்)
உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தின் நிலைமை தொடர்பில் காத்தான்குடி மீடியா போரம் ஜம் இய்யதுல் உலமா சபையுடன் கலந்துரையாடல் புதன்கிழமை (05) இடம் பெற்றது.
காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா சபை தலைவர் அஷ்ஷேய்க் ஏ.எம்.ஹாறுன் (ரஷாதி) தலைமையில் இடம் பெற்ற இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தின் நிலைமை மற்றும் அக்கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான கள விஜயம் ஒன்றை காத்தான்குடி மீடியா போரத்தின் ஊடகவியலாளர்கள் மேற்கொண்டனர்.
கள விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை தொகுத்து அறிக்கையாக காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமாவுக்கு கையளித்ததுடன் இது விடயம் தொடர்பாக கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டது.
இக் கலந்துரையாடலில் காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமாவின் உப தலைவர் அஷ்ஷேய்க் எம்.ஐ.அப்துல் கபூர் (மதனி), செயலாளர் அஷ்ஷேய்க் எம்.ஐ.எம்.ஜவாஹிர் (பலாஹி), மீடியா போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன், ஆயுட்கால தலைவர் மெளலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி), செயலாளர் எம்.ஐ.அப்துல் நஸார் மற்றும் ஜம் இய்யதுல் உலமா உலமாக்கள்,மீடியா போர ஊடகவியலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.
Photo by saji
Photo by saji
உன்னிச்சை இருநூறுவில் கிராமம் தொடர்பான ஆய்வு அறிக்கை மீடியா போரம் காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமாவிடம் கையளிப்பு..
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 05, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 05, 2025
Rating:










கருத்துகள் இல்லை: