காத்தான்குடியி லிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் வழங்கிய கௌரவப் பிரியாவிடை
காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கலாநிதி MLAM. ஹிஸ்புல்லாஹ் வழங்கிய கௌரவப் பிரியாவிடை மற்றும் பாராட்டு..!
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக (OIC) அர்ப்பணிப்புடன் பணியாற்றி, தற்போது லிந்துல பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் R.M.I. ரத்நாயக்க நேற்று (3) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்து விடை பெற்றார்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ், OIC ரத்நாயக்க அவர்களின் கடந்த கால சேவைகளைப் பாராட்டினார்.
குறிப்பாக, நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அவர் ஆற்றிய உன்னத பணி மற்றும் முக்கிய சவால்களில் ஒன்றான போதைப் பொருள் ஒழிப்பு போன்ற சமூக நலன் சார்ந்த செயற்திட்டங்களில் அவர் காட்டிய சிறப்பான செயற்பாடு ஆகியவற்றுக்காக தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
காத்தான்குடி மக்களின் பாதுகாப்பு மற்றும் சமூக அமைதிக்காக ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது என்றும், அவரது இடமாற்றம் குறித்த மக்களின் நன்மதிப்பையும் அவர் இச்சந்தர்ப்பத்தில் எடுத்துரைத்தார்.
மேலும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி R.M.I. ரத்நாயக்க அவர்களுக்கு அவரது புதிய பணியிடமான லிந்துலவில் சிறப்பானதொரு எதிர்காலம் அமைய தனது பிரியாவிடை வாழ்த்துக்களைப் பகிர்ந்தளித்தார்.
நேர்மையான அதிகாரிக்கு வழங்கப்பட்ட இந்த கௌரவமான பிரியாவிடை, பொலிஸ் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது.
-- ஊடகப்பிரிவு-
காத்தான்குடியி லிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் வழங்கிய கௌரவப் பிரியாவிடை
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 03, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 03, 2025
Rating:


கருத்துகள் இல்லை: