பங்களாதேஷ் ஊடகத்துறை பேராசிரியர் கபில் கானுடன் மீடியா போரம் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் டஃபோடில் சர்வதேச பல்கலைக்கழகத்தின் (Daffodil International University) ஊடகம் மற்றும் தொடர்பாடல் துறை இணைப் பேராசிரியர் அப்துல் கபில் கான் அவர்களுக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை (13.11.2025) கொழும்பில் இடம்பெற்றது.
போரத்தின் தலைவர் எம்.பி.எம். பைறூஸ் தலைமையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஊடகத்துறை மேம்பாடு தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
பங்களாதேஷிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கும் முஸ்லிம் மீடியா போரத்திற்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத்துவதுடன் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிநெறிகள் மற்றும் வாய்ப்புகளை பகிர்ந்துகொள்வது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.
குறிப்பாக இலங்கையில் ஊடக பட்டப்படிப்பை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு பங்களாதேஷ் பல்கலைக்கழகங்களில் பட்டமேற்படிப்பை மேற்கொள்வதற்கான புலமைப்பரிசில்களை பெற்றுக்கொடுத்தல், டஃபோடில் சர்வதேச பல்கலைக்கழகத்தின் மூலம் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்குதல், ஊடக மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதில் இணைந்து பணியாற்றுதல், இலங்கை - பங்களாதேஷ் ஊடகவியலாளர்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்தி எல்லை தாண்டிய அறிக்கையிடல்களை (Cross Border Reporting) முன்னெடுத்தல் போன்ற விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.
பங்களாதேஷ் ஊடகத்துறை பேராசிரியர் கபில் கானுடன் மீடியா போரம் சந்திப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 15, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 15, 2025
Rating:




கருத்துகள் இல்லை: