சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முஹர்ரம் தின பரிசளிப்பு விழா - 2025
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முஹர்ரம் தின பரிசளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பான முறையில் கல்வி கற்று மத்ரஸாவில் இடம்பெறும் பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மத்ரஸா மாணவர்கள் இதன்போது சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, விளையாட்டில் திறமையை வெளிக்காட்டிய மத்ரஸா மாணவர்களுக்கு வெற்றிக்கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முஹர்ரம் தின பரிசளிப்பு விழா - 2025
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 24, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 24, 2025
Rating:









கருத்துகள் இல்லை: