Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மாற்றியமைக்கப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சைத் திகதிகள் 2026 ஜனவரி மாதத்தில் தீர்மானிக்கப்படும்.


 

மாற்றியமைக்கப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சைத் திகதிகள் 2026 ஜனவரி மாதத்தில் தீர்மானிக்கப்படும்.

* தடங்கலின்றிப் பரீட்சைக்குத் தயாராவதற்காக மாணவர்களுக்கு, ஈ-தக்சலாவ (E-Thaksalawa) இலத்திரனியல் தளங்களை அணுகுவதற்கான வசதியினை கல்வி அமைச்சு வழங்குகிறது.

நிச்சயமற்ற தன்மையைக் குறைப்பதற்கு விரைவாகப் பதிலளிக்கும் வகையில், ‘திட்வா’ சூறாவளிக்குப் பிந்தைய கல்வித் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் 2026 ஜனவரி 12ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடத்தப்படுமென கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த எதிர்பாராத அனர்த்த சூழ்நிலையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்து கொள்ளும் வகையில், கல்வி அமைச்சு தொடர்ச்சியான கல்வி ஆதரவை வழங்குவதற்காகச் செயற்பாட்டு ரீதியாக இலத்திரனியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது. 

தேசிய இ-கற்றல் தளமான ஈ-தக்சலாவிற்கான (E-Thaksalawa) அணுகலை மேம்படுத்துவதன் மூலம், மாணவர்கள் எந்தவொரு இடத்திலிருந்தும் பாட உள்ளடக்கங்கள் மற்றும் கடந்தகால வினாத்தாள்களைப் பெற இது வழிவகுக்கிறது. 

பாடசாலை மூடப்படுதல் மற்றும் வெளிப்புற நெருக்கடிகள் எவ்வாறாக இருப்பினும், மாணவர்கள் பரீட்சைக்குத் தடங்கலின்றித் தயாராவதை இந்த முயற்சி உறுதி செய்யும்.

கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பிரதமரின் டிஜிட்டல் மயமாக்கலுக்கான செயலணி ஆகியன இணைந்து மேற்கொண்ட அர்ப்பணிப்பு மிக்க கூட்டு முயற்சிகள் மூலமாகவே கல்வி ஆதரவை இலத்திரனியல் மயமாக்கும் விரைவான நடவடிக்கை சாத்தியமாகி இருக்கின்றது. 

இவர்களின் துரித ஒருங்கிணைப்பு, அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கங்கள் ஒழுங்கமைக்கப்படுதல், பதிவேற்றம் செய்தல் ஆகியன மாணவர்கள் இதனை அணுகுவதற்கு வழி வகுத்திருக்கின்றது.

எதிர்காலத்தில், க.பொ.த. சாதாரண தர (O/L) மாணவர்களுக்காகவும், 2026 பெப்ரவரி மாதம் முதல் இதேபோன்ற இலத்திரனியல் கற்றல் வள வசதி பெற்றுக் கொடுக்கப்படும். \

இது எதிர்பாராத சவால்களுக்கு முகம் கொடுக்கும் ஆற்றலைக் கொண்ட இலங்கையின் கல்வி முறைமையில், வலுவான, டிஜிட்டல்மயமாக்கப்பட்ட கல்வி முறைமையை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

மாற்றியமைக்கப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சைத் திகதிகள் 2026 ஜனவரி மாதத்தில் தீர்மானிக்கப்படும். Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 11, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.