பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு நிவாரண உதவி
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசு மற்றும் அந்நாட்டு மக்களின் நிவாரணப் பொருட்களுடனான விமானம் (29) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது.
இந்த நன்கொடையில் கூடாரங்கள், போர்வைகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட சுமார் 12 டொன் மனிதாபிமான உதவிகள் அடங்குகின்றன. மேலும், இலங்கை விமானப்படை அந்த நிவாரணப் பொருட்களை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றது.
மேலும், போர்வைகள், பாய்கள், நுளம்பு வலைகள், சூரிய சக்தி விளக்குகள், கூடாரங்கள், பெண்களுக்கு அவசியமான பொருட்கள் (female dignity kits) உள்ளிட்ட 09 டொன் நிவாரணப் பொருட்களுடன் மற்றொரு இந்திய விமானம், இந்திய தேசிய அனர்த்த மீட்புப் படை (NDRF) அதிகாரிகள் குழுவினருடன் இன்று காலை இலங்கை வந்தடைந்தது.
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 01, 2025
Rating:

கருத்துகள் இல்லை: