காத்தான்குடி ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வரும் நபருக்கு எதிராக பொலிஸ் மற்றும் கணினி குற்ற விசாரணை பிரிவுகளில் முறைப்பாடு!
காத்தான்குடியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான பீ.எம். பயாஸ் என்பவருக்கு எதிராக, வெளிநாட்டில் தொழில் நிமித்தமாக வசித்து வரும் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் திட்டமிட்ட முறையில் பொய்யான அவதூறுகளை சமூக ஊடகங்கள் வழியாக பரப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் காத்தான்குடியில் இடம்பெற்ற வீட்டுக்குள் மனைவியை அடைத்து வைத்த சம்பவம் தொடர்பில், குறித்த நபர் ஊடகவியலாளர் பீ.எம். பயாஸின் உதவியாளர் என தவறான தகவலை உருவாக்கி, தனது பேஸ்புக் பதிவுகள் மற்றும் வாட்ஸ்அப் குழுமங்கள் ஊடாக திட்டமிட்டு பரப்பியுள்ளார்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (14), அவதூறு மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்ட குறித்த நபருக்கு எதிராக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும், கணினி குற்ற விசாரணை பிரிவிலும் உத்தியோகபூர்வ முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வரும் நபருக்கு எதிராக பொலிஸ் மற்றும் கணினி குற்ற விசாரணை பிரிவுகளில் முறைப்பாடு!
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 15, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 15, 2025
Rating:

கருத்துகள் இல்லை: