தனியார் வகுப்புக்கள், குர்ஆன் மதரஸாக்கள் தொடர்பான தீர்மானங்களை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் குர்ஆன் மதரஸாக்கள் மற்றும் மார்க்க ஷரீஆவை பயிற்றுவிக்கும் மதரஸாக்களின் நேர ஒழுங்கு, விடுமுறை, சுகாதாரம் மற்றும் சமூக ரீதியான விடயங்கள் தொடர்பாக காத்தான்குடி நகரசபை கௌரவ மக்கள் பிரதிநிதிகளின் பொதுச்சபை அமர்வில் பெறப்பட்ட தீர்மானத்திற்கமைய 2025.10.29 ஆம் திகதி மேற்கூறப்பட்ட நிறுவனங்கள் மற்றும் மதரஸா பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
அதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், வருட இறுதியில் பாடசாலை விடுமுறை வழங்கப்படும் போது தனியார் வகுப்புக்கள், குர்ஆன் மதரஸாக்கள் மற்றும் மார்க்க ஷரிஆவை பயிற்றுவிக்கும் மதரசா மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எதிர் வரும் 2025.12.26 ஆம் திகதி தொடக்கம் 2026.01.04 ஆம் திகதி வரை வழங்கப்படும்.
பாடசாலை விடுமுறையுடன் மேற்கூறப்பட்ட அனைத்து பிரிவினரும் தம்மிடம் பயிலும் அனைத்து மாணவ மாணவியருக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்று அறியத்தருவதோடு இதனை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனையும் அறியத் தருகின்றேன்.
SHM அஸ்பர் JP UM
நகர முதல்வர்,
நகர சபை,
காத்தான்குடி.
தனியார் வகுப்புக்கள், குர்ஆன் மதரஸாக்கள் தொடர்பான தீர்மானங்களை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 25, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 25, 2025
Rating:

கருத்துகள் இல்லை: