தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி
தெஹிவளை "A க்வாடஸ்" விளையாட்டரங்கிற்கு அருகில் (6) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
உயிரிழந்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இரண்டு பாதாள குழுக்களுக்கு இடையே காணப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 07, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 07, 2025
Rating:
.jpeg)
கருத்துகள் இல்லை: