மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2534 மில்லியன் பெறுமதியில் வீதிகளை மீளமைப்பதற்குத் திட்டம்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா பங்குபற்றுதலுடன் மாவட்டத்திற்கு 2534 மில்லியன் பெறுமதியிலான வீதி அபிவிருத்தி திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு இன்று (25) இடம் பெற்றன.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் நடைபெறும் இரண்டாவது ஒருங்கிணைந்த நிகழ்வுகள் இடம் பெற்றது.
இத் திட்டத்தின் மூலம் மாவட்டத்திற்கு 48 வீதிகள் 52.23 கிலோ மீற்றர் நிலம் கொண்ட வீதிகள் அமைக்கப்படவுள்ளன.
ஆரம்பக் கட்டமாக வந்தாறுமூலை களுவன்கேணி 2.10 கிலோ மீற்றர் நிலமான வீதியும், உப்போடை ஈஸ்ட்லகூன்வீதி 2.38 கிலோ மீற்றர் நிலமான வீதியும், குறிஞ்சாமுனை பாவற்கொடிச்சேனை வரையிலான 6 கிலோ மீற்றர் நிலமான வீதியும், களுமுந்தன் வெளியில் 2.64 கிலோ மீற்றர் நிலமான வீதியும் புணரமைக்கப்படவுள்ளன.
இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் அடையாளமாக காணப்படும் கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் காணப்படும் இவ் வீதியினை புணர்நிர்மானம் மேற்கொண்டு மிக விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என்பதுடன் இம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளை அமைத்து தொழில் வாய்ப்புக்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளட்டவுள்ளதாக கருத்து தெரிவித்தார்.
இப் பிரதேசத்தில் வாழும் 150 மேற்பட்ட குடும்பங்களின் வேண்டுகோளுக்கு அமைவாக எதிர்வரும் மார்ச் மாதம் 15 திகதிக்கு முன்னர் இவ் வீதியை நிறைவு செய்வதற்கு பணிப்புரை செய்வதாக போக்கு வரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கூறியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 25, 2026
Rating:

கருத்துகள் இல்லை: