அல் - ஹிறா மகா வித்தியாலயத்தில் புதிய கல்வி மறு சீரமைப்பு பற்றிய பெற்றோருக்கான விழிப்புணர்வு இன்று இடம் பெற்றது.
(செய்தியாளர்
எம்.எஸ்.எம்.சஜீ)
2026ம் ஆண்டு தரம் 06இல் கல்வி கற்க இருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கான புதிய கல்வி மறு சீரமைப்பு அறிமுகமும் திசை முகப்படுத்தலும் நிகழ்வின் முதலாம் கட்டம் புதன்கிழமை (31)அதிபர் எம்.பீ.எம்.றபீக் தலைமையில் பாடசாலையில் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதான வளவாளராக மட்/மம/ காங்கேயனோடை அல்- அக்ஸா மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். நுஸ்ரி நளீமி கலந்து கொண்டு "புதிய கல்வி சீர்திருத்தமும் பெற்றோர் பங்களிப்பும்" எனும் தலைப்பில் விரிவுரை நிகழ்த்தினார்.
ஆர்வத்துடன் இந்நிகழ்வில் பெருமளவான பெற்றோர்கள் கலந்து கொண்டதுடன் தமது கேள்விகளுக்கான தெளிவுகளையும் பெற்றுக் கொண்டனர்.
அல் - ஹிறா மகா வித்தியாலயத்தில் புதிய கல்வி மறு சீரமைப்பு பற்றிய பெற்றோருக்கான விழிப்புணர்வு இன்று இடம் பெற்றது.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 01, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 01, 2026
Rating:






கருத்துகள் இல்லை: