சப்ரகமுவ கூட்டுறவுச் சங்கம் - சைபர் வெளிக்குள்
சப்ரகமுவ மாகாண கூட்டுறவு சங்கத்தின் இணையத்தளத்திற்கு சேர்க்கும் நிகழ்வு அண்மையில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்தினம் தலைமையில் இரத்தினபுரியில் அமைந்துள்ள இரத்தினபுரி மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
www.dcd.sg.gov.lk இனால் அதற்குள் நுழைவதற்கு வாய்ப்புக் காணப்படுகிறது.
இங்கு சப்ரகமுவ மாகாண கூட்டுறவுச் சங்கங்களின், உத்தியோகத்தர்களுக்காக முகாமைத்துவ தகவல் கட்டமைப்பு (COOPMIS), மாதிரி விண்ணப்ப படிவங்கள், கேள்விப் பத்திரம், சிற்று நிருபங்கள் மற்றும் அறிவித்தல்களை தரவிறக்கம் செய்தல் , கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கிராமிய வங்கி விபரங்கள், கூட்டுறவு அங்கத்தவர்களுக்கான ஓய்வூதிய சம்பள கட்டமைப்பு (COOP PENSION) ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயப்பயப்படுத்தல் கொள்கை செயற்பாட்டை முன்னேற்றுதல் மற்றும் அரசாங்க சேவையை மிகவும் வினைத்திறனாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் பொதுமக்களுக்கு நெருக்கமானதாக வழங்குவதே இதன் பிரதானமாக நோக்கமாகும்.
சப்ரகமுவ கூட்டுறவுச் சங்கம் - சைபர் வெளிக்குள்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 05, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 05, 2026
Rating:

கருத்துகள் இல்லை: