புத்தளம் ஸாஹிரா வித்தியாலயத்தின் மாணவர்களால் உருவாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையத்தளம் பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது

"தரவு, கொள்கை மற்றும் பிள்ளைகளுக்கு சிறந்தை வழங்குதல் எமது நோக்கமாகும். அரசியல் தேவை அல்லது ஏனைய எந்த ஒன்றும் எமக்கு முக்கியமானது அல்ல; எமக்கு பிள்ளைகள் தான் நோக்கம்" என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
'திட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை கண்காணிப்பதற்காக, ஜனவரி 17 புத்தளம் ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயதில் மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொண்ட போது பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
புத்தளம் சாஹிரா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களால் உருவாக்கப்பட்ட பள்ளியின் உத்தியோகபூர்வமாக வலைத்தளத்தை பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.
பாடசாலையில் உயர்தர விஞ்ஞான பாடத்தைத் ஆரம்பிப்பதற்கு அனுமதி அளித்தது தொடர்பாக அதிபர் முன்வைத்த கருத்துக்களுக்கு பதிலளித்த பிரதமர், மாணவர்களுக்கு விஞ்ஞானம் மட்டுமல்ல, மற்ற அனைத்து பாடங்களிலும் அறிவு வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகள் இதற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பிளவுபட்ட சமூகத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் தத்துவம் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிள்ளைகளுக்கு சிறந்ததைச் செய்ய வேண்டும் என்றும், இதற்காக எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பான திட்டங்கள் பாடசாலை மட்டத்தில் கூட்டாக கலந்துரையாடப்பட்டு, தனக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
பாடசாலைகளைப் தரப்படுத்துவதன் மூலம் மாணவர்ககளுக்கு வசதியான கல்வியை வழங்குவது சாத்தியமில்லை என்றும், மாணவர்களின் தேவைகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,
"கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளின் விளைவுகளை நாம் இப்போது அனுபவித்து வருகிறோம். ஆனால் இப்போது நமக்கு ஒரு நல்ல நிகழ்காலம் உள்ளது. எனவே, இனிமேல், அரசியல் அல்லது தனிப்பட்ட காரணிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்த்து, அனைத்து குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவும் முடிவுகளை எடுக்க வேண்டும்."
பல்வேறு திறமைகள் நிறைந்த மாணவர்களை உருவாக்குவதற்கு, ஒரு பாடத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், ஒவ்வொரு துறையிலும் புரிதல் உள்ள குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள் கயான் ஜனக குமார, அஜித் கிஹான், முகமது பைசல் மற்றும் புத்தளம் மாவட்ட மேயர் ஹிருணி விஜேசிங்க, வடமேற்கு மாகாண கல்விச் செயலாளர், பணிப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் குழுவும் கலந்து கொண்டனர்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 18, 2026
Rating:
கருத்துகள் இல்லை: