Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கியூபாதான் அடுத்த குறி!

“வெனிசுலா மற்றும் ஈரானின் ராணுவ வெற்றிக்குப் பிறகான அடுத்த இலக்கு கியூபாதான்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப், வெனிசுலா மற்றும் ஈரானில் அமெரிக்க ராணுவம் மகத்தான வெற்றிகளைப் பெற்றுள்ளதாக பாராட்டினார்.

அப்போது அவர், ‘‘நான் இந்த மகத்தான (அமெரிக்க) ராணுவத்தை உருவாக்கினேன். நீங்கள் ஒருபோதும் போரில் ஈடுபட வேண்டியிருக்காது என்று நான் அவர்களிடம் கூறி இருந்தேன்.

ஆனால், சில நேரங்களில் ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. சொல்லப்போனால் அடுத்தது கியூபாதான்’’ என தெரிவித்தார்.

எனினும் பின்னர், ‘‘நான் அப்படி சொல்லவில்லை என்று பாவித்துக்கொள்ளுங்கள். நான் அப்படி சொல்லவில்லை என்றே நினைத்துக்கொள்ளுங்கள்’’ என குறிப்பிட்டார்.

வெனிசுலாவின் நட்பு நாடாக இருந்து வந்த கியூபா, அந்த நாட்டிடம் இருந்து எரிபொருட்களை பெற்று வந்தது.

கடந்த ஜனவரியில் வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்து தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்றதை அடுத்து, கியூபாவுக்கான எரிபொருள் விநியோகத்தை அமெரிக்கா நிறுத்திவிட்டது.

இது குறித்து குறிப்பிடும் ட்ரம்ப், ‘‘கடுமையான பொருளாதார நெருக்கடியை கியூபா சந்தித்து வருகிறது. கியூப அரசாங்கம் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது என்றே நான் நம்புகிறேன். அந்த நாட்டுக்கு எதிராக அமெரிக்கா, ராணுவ ரீதியிலான நேரடி நடவடிக்கையை எடுக்கலாம்.

எனினும், ராணுவ மோதலை தவிர்க்கும் நோக்கில், அமெரிக்காவுடன் தங்கள் நாடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கியூப ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கேனல் ஒப்புக்கொண்டுள்ளார்.

பேச்சுவார்த்தையின் இறுதியில் கியூபா நட்பான கையகப்படுத்தலுக்கு உள்ளாகலாம்; உள்ளாகாமலும் போகலாம்’’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கியூபாதான் அடுத்த குறி! Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 29, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.