Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நவீன உலகின் சவால்கள், மீளெழும் திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கு பேராசிரியர் சுரங்க நாணயக்காரவினால் எழுதப்பட்ட “அபியோகய“அபியோகய” (சவால்) எனும் இந்த நூல் ஒரு காத்திரமான, காலத்திற்குப் பொருத்தமான பங்களிப்பாகும். ஹரிணி அமரசூரிய


சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர் பேராசிரியர் சுரங்க நாணயக்காரவினால் எழுதப்பட்ட “அபியோகய - உங்கள் வெற்றிக் கதையை நீங்களே எழுதுங்கள்” எனும் நூலின் வெளியீட்டு விழா, 2026 மார்ச் 28 பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் தாமரை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.


பேராசிரியர் சுரங்க நாணயக்காரவினால் எழுதப்பட்ட இந்நூல், சமகால உலக மற்றும் தனிப்பட்ட சவால்கள், புத்தாக்கம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனவுறுதியின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது. 


கல்விசார் அனுபவம் மற்றும் சர்வதேச ரீதியிலான வெளிப்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தூண்டுதல் மிக்க பார்வையை இது வாசகர்களுக்குப் பெற்றுக்கொடுக்கின்றது. இந்த நூல் மற்றும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியன இதன்போது பிரதமரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.



இந்த முக்கியமான வெளியீட்டிற்காக ஆசிரியருக்குப் பாராட்டுத் தெரிவித்த பிரதமர், இத்தகைய கல்விசார் படைப்புகள் எதிர்காலச் சந்ததியினரை, குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களை ஆக்கபூர்வமாகச் சிந்திக்கவும், சவால்களை ஏற்றுக்கொள்ளவும், சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கத் தூண்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன எனக் குறிப்பிட்டார். 


அத்துடன், இலங்கையில் ஒரு முற்போக்கான, அதேநேரத்தில் அனைவரையும் உள்வாங்கிய கல்விச் சூழலை உருவாக்குவதில் அறிவுப் பகிர்வு மற்றும் புத்தாக்கத்தின் முக்கியத்துவத்தையும் அவர் மேலும் வலியுறுத்தினார்.




இந்நூலில் உள்வாங்கப்பட்டிருக்கின்ற அறிவை அதிகளவான வாசகர்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்நூலின் 5,000 பிரதிகளை மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாகப் பெற்றுக்கொடுக்கும் திட்டத்தையும் பிரதமர் இதன்போது ஆரம்பித்து வைத்தார்.


இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் திரு. எரங்க வீரரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக கலுவெவ, பேராசிரியர் சுரங்க நாணயக்காரவின் குடும்ப உறுப்பினர்கள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


பிரதமர் ஊடகப் பிரிவு
நவீன உலகின் சவால்கள், மீளெழும் திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கு பேராசிரியர் சுரங்க நாணயக்காரவினால் எழுதப்பட்ட “அபியோகய“அபியோகய” (சவால்) எனும் இந்த நூல் ஒரு காத்திரமான, காலத்திற்குப் பொருத்தமான பங்களிப்பாகும். ஹரிணி அமரசூரிய Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 29, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.