Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பிரஜாசக்தி நிகழ்ச்சித்திட்டம் - 2026 30 பயனாளிகளுக்கு முதற்கட்ட காசோலைகள் வழங்கி வைப்பு


 (எம்.எஸ்.எம்.ஸாகிர்)

“தமக்கான ஓர் இடம் அழகான வாழ்க்கை” எனும் அரசின் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் 
தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயனாளிகளுக்கான
(10 இலட்சம் பெறுமதியான) வீடுகளுக்கான முதற்கட்ட காசோலையான 150,000/- பெறுமதியான காசோலைகள் 
வழங்கி வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது.


இந் நிகழ்வில், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான  காசோலைகளை வழங்கி வைத்தார்.


இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச  செயலாளர் எம்.எம்.ஆசிக், தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், தேசிய மக்கள் சக்தியின் மருதமுனை அமைப்பாளர் தோழர் றினாஸ், மாவடிப்பள்ளி அமைப்பாளர் தோழர் சப்றூஸ், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.இம்தியாஸ், இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம்.ஆரிப், பிரஜாசக்தியின் தவிசாளர்கள் மற்றும்  தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பிரஜாசக்தி நிகழ்ச்சித்திட்டம் - 2026 30 பயனாளிகளுக்கு முதற்கட்ட காசோலைகள் வழங்கி வைப்பு Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 09, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.