Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பில் "ஸ்மாஷ் மாஸ்டர்ஸ்-2026" பேட்மின்டன் தொடர் வெற்றிகரமாக நிறைவு; மாவட்ட அரசாங்க அதிபர் பாராட்டு

 


மட்டக்களப்பில் "ஸ்மாஷ் மாஸ்டர்ஸ்-2026" பேட்மின்டன் தொடர் வெற்றிகரமாக நிறைவு; மாவட்ட அரசாங்க அதிபர் பாராட்டு

மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான "ஸ்மாஷ் மாஸ்டர்ஸ்-2026" பேட்மின்டன் போட்டிகள், மாவட்ட பேட்மின்டன் விளையாட்டு கழகத்தின் தலைவர் வி. பேரின்பராஜா தலைமையில் ரோசாரியோ லேன் பகுதியில் அமைந்துள்ள கழகத்தின் உட்புற விளையாட்டு அரங்கில் (19) வெகுவிமரிசையாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பேட்மின்டன் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இப்போட்டித் தொடரில், மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த இளைஞர், யுவதிகள் தங்களது அபாரமான விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், மட்டக்களப்பு மாவட்டத்தில் பேட்மின்டன் விளையாட்டை மேம்படுத்துவதற்காகக் கழக உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் விடாமுயற்சிகளையும் தொடர்ச்சியான ஈடுபாட்டையும் வெகுவாகப் பாராட்டினார். இவ்வாறான விளையாட்டுப் போட்டிகள் ஒற்றுமையையும் ஆரோக்கியமான போட்டி உணர்வையும் வளர்ப்பதுடன், வளர்ந்து வரும் வீரர்களுக்குச் சிறந்ததொரு தளமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசாங்க அதிபரினால் வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்நிகழ்வில் சுற்றுப் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எஸ். ஸ்ரீ முருகன், பொறியியலாளர் என். திருவருள் செல்வன் மற்றும் கழக உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

விளையாட்டுச் செய்தி



මඩකලපුව "ස්මෑෂ් මාස්ටර්ස්-2026" බැඩ්මින්ටන් තරගාවලිය සාර්ථකව නිම වෙයි

මඩකලපුව දිස්ත්‍රික් මට්ටමේ බැඩ්මින්ටන් තරගාවලියක් වන "ස්මෑෂ් මාස්ටර්ස්-2026", මඩකලපුව බැඩ්මින්ටන් ක්‍රීඩා සමාජයේ සභාපති වී. පේරින්බරාජා මහතාගේ ප්‍රධානත්වයෙන් රොසාරියෝ ලේන් හි පිහිටි ගෘහස්ථ ක්‍රීඩාංගණයේදී (19) පැවැත්විණි. මඩකලපුව දිස්ත්‍රික් බැඩ්මින්ටන් සංගමය සමඟ එක්ව සංවිධානය කරන ලද මෙම තරගාවලියේදී දිස්ත්‍රික්කයේ තරුණ තරුණියන් සිය ක්‍රීඩා දක්ෂතා මැනවින් ප්‍රදර්ශනය කළහ.

මෙම අවස්ථාවට ප්‍රධාන අමුත්තා ලෙස සහභාගී වූ මඩකලපුව දිස්ත්‍රික් ලේකම් ජේ.එස්. අරුල්රාජ් මහතා, දිස්ත්‍රික්කයේ බැඩ්මින්ටන් ක්‍රීඩාව නංවාලීම සඳහා ක්‍රීඩා සමාජ සාමාජිකයින් ගන්නා උත්සාහය අගය කළේය. තරගාවලියේ ජයග්‍රාහකයින් සඳහා කුසලාන සහ සහතික පත් පිරිනැමීම දිස්ත්‍රික් ලේකම්වරයා අතින් සිදු විය.

කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

ක්‍රීඩා පුවත්


"Smash Masters-2026" Badminton Tournament Successfully Concludes in Batticaloa

The district-level badminton tournament "Smash Masters-2026" was held successfully at the Batticaloa Badminton Club’s indoor stadium on Rosario Lane (19), presided over by Club President V. Perinbaraja. Organized in collaboration with the Batticaloa District Badminton Association, the event provided a significant platform for the district's youth to showcase their sporting talents.

The Government Agent (GA) of Batticaloa, Mr. J.S. Arulraj, attended as the Chief Guest and commended the club members for their dedication to promoting badminton in the region. He noted that such tournaments foster unity and a healthy competitive spirit among young athletes. The winners were awarded trophies and certificates by the GA. Tournament Coordinator S. Srimurugan, Engineer N. Thiruvarul Selvan, and many club members and parents were also in attendance.

KR TV Network

KR TV Lankan Voice

Sports News






மட்டக்களப்பில் "ஸ்மாஷ் மாஸ்டர்ஸ்-2026" பேட்மின்டன் தொடர் வெற்றிகரமாக நிறைவு; மாவட்ட அரசாங்க அதிபர் பாராட்டு Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 21, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.