ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவ பட்டதாரிகள் 402 பேருக்குச் சௌக்கிய மற்றும் ஊடகத்துறை அமைச்சரால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு
ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவ பட்டதாரிகள் 402 பேருக்குச் சௌக்கிய மற்றும் ஊடகத்துறை அமைச்சரால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு
ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகள் 402 பேருக்கான உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு சௌக்கிய மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று (28) கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டப்படிப்பு பீட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நியமனங்களைப் பெற்றுக்கொண்ட பட்டதாரிகள் கொழும்பு பல்கலைக்கழக சுதேச மருத்துவ பீடம், கம்பஹா விக்கிரமாராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடம் ஆகியவற்றில் 2017-2018 கல்வியாண்டுகளில் ஐந்தாண்டு பட்டப்படிப்பினை நிறைவு செய்தவர்களாவர். இவர்கள் போதனா வைத்தியசாலைகள், ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மாகாண ஆயுர்வேத திணைக்கள வைத்தியசாலைகளில் ஒரு வருட கால உள்ளகப் பயிற்சியினைப் பெறவுள்ளனர்.
நியமனம் பெற்ற 402 பட்டதாரிகளில் 249 பேர் ஆயுர்வேத பிரிவையும், 109 பேர் சித்த மருத்துவப் பிரிவையும், 44 பேர் யுனானி பிரிவையும் சேர்ந்தவர்களாவர். இப்பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்கள் ஆயுர்வேத மருத்துவ சபையில் பதிவு செய்யப்படுவதுடன், பயிற்சியின் போது அமைச்சினால் மாதாந்தக் கொடுப்பனவும் வழங்கப்படும்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நிதி ஒழுக்கம் அவசியம் என வலியுறுத்தினார். டித்வா சூறாவளி பாதிப்புகளைச் சீர்செய்ய திறைசேரியிலிருந்து 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவுகளுக்காக வரலாற்றில் மிக அதிகத் தொகையான 2000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சௌக்கிய அமைச்சு தனது தேவையின் அடிப்படையிலேயே பயிற்சிகளை வழங்குவதாகவும், உயர்கல்வி அமைச்சினால் வழங்கப்படும் அனைத்துப் பட்டதாரிகளையும் உள்வாங்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இதே போன்றதொரு நிலைமையை எதிர்காலத்தில் மேற்கத்திய மருத்துவப் பட்டதாரிகளும் சந்திக்க நேரிடும் என்றும், வெற்றிடங்களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட முறைமையின் கீழேயே எதிர்கால ஆட்சேர்ப்பு அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் சமந்தி ரணசிங்க, ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தீப்தி சுமனசேன உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
ආයුර්වේද, සිද්ධ සහ යුනානි වෛද්ය උපාධිධාරීන් 402 දෙනෙකුට සෞඛ්ය හා ජනමාධ්ය අමාත්යවරයාගෙන් පත්වීම්
ආයුර්වේද, සිද්ධ සහ යුනානි වෛද්ය උපාධිධාරීන් 402 දෙනෙකු සඳහා සීමාවාසික පුහුණු පත්වීම් ලිපි ප්රදානය කිරීම සෞඛ්ය හා ජනමාධ්ය අමාත්ය වෛද්ය නලින්ද ජයතිස්ස මහතාගේ ප්රධානත්වයෙන් ඊයේ (28) කොළඹ විශ්ව විද්යාලයේදී පැවැත්විණි.
මෙම උපාධිධාරීන් කොළඹ, ගම්පහ වික්රමාරච්චි, යාපනය සහ නැගෙනහිර විශ්ව විද්යාලවලින් පස් අවුරුදු උපාධිය හැදෑරූවන් වන අතර ඔවුන් වසරක කාලයක් ශික්ෂණ රෝහල් සහ ආයුර්වේද පර්යේෂණායතනවල පුහුණුව ලැබීමට නියමිතය. පත්වීම් ලැබූ පිරිසට ආයුර්වේද අංශයෙන් 249 ක් ද, සිද්ධ අංශයෙන් 109 ක් සහ යුනානි අංශයෙන් 44 ක් ඇතුළත් වේ.
මෙහිදී අදහස් දැක්වූ අමාත්යවරයා, රටේ ආර්ථිකය ශක්තිමත් කිරීමට මූල්ය විනයක් අවශ්ය බවත්, දිට්වා සුළි කුණාටුවෙන් සිදු වූ හානි යථා තත්ත්වයට පත් කිරීමට රුපියල් මිලියන 500 ක් වෙන් කළ බවත් පැවසීය. එසේම මෙවර අයවැයෙන් ප්රාග්ධන වියදම් සඳහා ඉතිහාසයේ වැඩිම මුදල වන රුපියල් බිලියන 2000 ක් වෙන් කිරීමට බලාපොරොත්තු වන බවද ඔහු සඳහන් කළේය.
සෞඛ්ය අමාත්යාංශයට උපාධිධාරීන් බඳවා ගැනීම අවශ්යතාවය මත පමණක් සිදු වන බවත්, ඉදිරියේදී බටහිර වෛද්ය උපාධිධාරීන්ට ද මෙවැනිම තත්ත්වයකට මුහුණ දීමට සිදු විය හැකි බවත් අමාත්යවරයා වැඩිදුරටත් කියා සිටියේය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Health Minister Grants Internship Appointments to 402 Ayurveda, Siddha, and Unani Graduates
Minister of Health and Mass Media, Dr. Nalinda Jayatissa, presided over a ceremony yesterday (28) at the University of Colombo to award internship appointment letters to 402 graduates in Ayurveda, Siddha, and Unani medicine.
The recipients, who completed their five-year degrees at the Universities of Colombo, Jaffna, Eastern, and Gampaha Wickramarachchi, will undergo one year of training at teaching hospitals and Ayurvedic research institutes. The cohort consists of 249 Ayurveda, 109 Siddha, and 44 Unani practitioners.
Addressing the gathering, Minister Jayatissa emphasized the importance of financial discipline for national development. He revealed that 500 million rupees were allocated to repair damages caused by Cyclone Ditva without increasing taxes and announced that the upcoming budget would allocate 2,000 billion rupees for capital expenditure—the highest in history.
The Minister clarified that the Health Ministry recruits based on actual requirements and noted that even Western medical graduates might soon face similar limitations as vacancies reach capacity. Future entries into the service will be governed by a specific regulatory framework.
KR TV Network
KR TV Lankan Voice
Domestic News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 29, 2026
Rating:

கருத்துகள் இல்லை: