Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கள்ள உறவுத் தகராறில் மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவன்; வட்டவளையில் சோகம்


கள்ள உறவுத் தகராறில் மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவன்; வட்டவளையில் சோகம்

கள்ள உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வட்டவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று (17) அதிகாலை குறித்த பெண் தனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்தில் வெலிஓயா, UDK பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

வெளிநாடு சென்றிருந்த இப்பெண், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே நாடு திரும்பி தனது கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். பின்னர் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது குழந்தையுடன் வெலிஓயாவில் உள்ள தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவரை மீண்டும் அழைத்துச் செல்ல நேற்று (16) அங்கு சென்ற கணவனிடம், மனைவி அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அதிகாலை வேளையில் உறங்கிக்கொண்டிருந்த மனைவியைக் கணவன் படுகொலை செய்துள்ளார். இக்கொலை தொடர்பாக 30 வயதுடைய கணவன் மற்றும் கள்ள உறவு வைத்திருந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி

අනියම් සබඳතාවක් හේතුවෙන් බිරිඳව අමානුෂික ලෙස ඝාතනය කළ සැමියා

අනියම් සබඳතාවක් සම්බන්ධයෙන් ඇති වූ ආරවුලක් දුරදිග යාමෙන් සැමියෙකු විසින් සිය බිරිඳට තියුණු ආයුධයකින් පහර දී ඝාතනය කිරීමේ පුවතක් වටවල ප්‍රදේශයෙන් වාර්තා වේ. අද (17) අලුයම අදාළ කාන්තාව සිය ඇඳේ නිදා සිටියදී මෙම ප්‍රහාරය එල්ල කර ඇති බව වටවල පොලිසිය පවසයි. මෙම සිද්ධියෙන් මියගොස් ඇත්තේ වැලිඔය, UDK ප්‍රදේශයේ පදිංචි 27 හැවිරිදි එක්දරු මවකි.

විදේශගතව සිට මෙරටට පැමිණි මෙම කාන්තාව, සිය දරුවා සමඟ වැලිඔය පිහිටි ඇයගේ මවගේ නිවසට ගොස් සිටියදී ඇයව යළි කැඳවාගෙන ඒම සඳහා සැමියා එහි ගොස් ඇත. එහිදී සිය බිරිඳ ප්‍රදේශයේ තරුණයෙකු සමඟ අනියම් සබඳතාවක් පවත්වන බවට සැමියාට තොරතුරු ලැබී ඇති අතර ඒ සම්බන්ධයෙන් ඇති වූ බහින්බස් වීමක් මෙම ඝාතනයට හේතු වී තිබේ. ඝාතනය සම්බන්ධයෙන් 30 හැවිරිදි සැමියා සහ අනියම් සබඳතාව පැවැත්වූ බව කියන තරුණයා පොලිසිය විසින් අත්අඩංගුවට ගෙන ඇති අතර සැකකරුවන් හැටන් මහේස්ත්‍රාත් අධිකරණයට ඉදිරිපත් කිරීමට නියමිතය.

කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

දේශීය පුවත්

Husband Brutally Murders Wife Over Extra-Marital Affair Dispute

A tragic incident has been reported from Watawala where a husband allegedly murdered his wife with a sharp weapon following a heated dispute over an extra-marital affair. According to the Watawala Police, the attack occurred early this morning (17) while the woman was asleep in her bed. The deceased has been identified as a 27-year-old mother of one, residing in the Welioya, UDK area.

The victim had recently returned from abroad and was staying at her mother's house for the past two weeks. When the husband arrived yesterday (16) to take her back home, he was informed by locals about his wife's alleged affair with a youth in the area. This led to a severe confrontation, resulting in the husband fatally attacking her in the early hours of the morning. Police have arrested the 30-year-old husband and the youth allegedly involved in the affair. Both suspects are to be produced before the Hatton Magistrate's Court as further investigations continue.

KR TV Network

KR TV Lankan Voice

Local News



கள்ள உறவுத் தகராறில் மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவன்; வட்டவளையில் சோகம் Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 17, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.