மாத்தறையில் நான்கு பிரதான வீதி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானம்
மாத்தறையில் நான்கு பிரதான வீதி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானம்
மாத்தறை மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நான்கு முக்கிய திட்டங்கள் குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சில் இன்று (20) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், வலுசக்தி பிரதியமைச்சர் அர்கம் இல்யாஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது பின்வரும் முக்கிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது:
* வெலிகம - தெலிஜ்ஜவில வீதி: இவ்வீதியின் முதல் ஒரு மைல் தூரத்தை (கல்பொக்க வீதி) அகலப்படுத்தி அபிவிருத்தி செய்யும் திட்டத்தை 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளீர்க்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கான காணி சுவீகரிப்பு யோசனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், காணி உரிமையாளர்களுக்கான இழப்பீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
* பழைய காலி வீதி: மாத்தறை போதிக்கு அருகிலிருந்து நூபே சந்தி வரையிலான பகுதியை அகலப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது.
* நூபே - கம்புருகமுவ வீதி: மாத்தறை நகர திட்டமிடல் திட்டத்தின் கீழ், கம்புருகமுவ முதல் நூபே வரையிலான வீதியை நான்கு வழிப்பாதையாக விரிவுபடுத்த விரிவாக ஆராயப்பட்டது.
* திஹகொட - முலட்டியன வீதி: இவ்வீதியை அகலப்படுத்தி நவீன முறையில் அபிவிருத்தி செய்வது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வெலிகம நகர சபை தலைவர் மொஹமட் அப்ராஸ், அமைச்சின் மேலதிக செயலாளர் சரசி குணசேகர, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஏ.பி.கே. அபேதீர மற்றும் வெலிகம பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
මාතර දිස්ත්රික්කයේ මාර්ග පද්ධතිය නවීකරණය කිරීම සහ රථවාහන තදබදයට විසඳුම් සෙවීම වෙනුවෙන් ක්රියාත්මක කිරීමට යෝජිත ප්රධාන ව්යාපෘති හතරක් පිළිබඳ විශේෂ සාකච්ඡාවක් අද (20) ප්රවාහන හා මහාමාර්ග අමාත්යාංශයේදී පැවැත්විණි. ප්රවාහන හා මහාමාර්ග නියෝජ්ය අමාත්ය වෛද්ය ප්රසන්න ගුණසේන මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැති මෙම හමුවට බලශක්ති නියෝජ්ය අමාත්ය අර්කම් ඉල්යාස් මහතා ඇතුළු නිලධාරීන් පිරිසක් එක්වූහ.
මෙහිදී සාකච්ඡාවට බඳුන් වූ ප්රධාන ව්යාපෘති මෙසේය:
* වැලිගම - තෙලිජ්ජවිල මාර්ගය: මෙම මාර්ගයේ පළමු සැතපුම (ගල්බොක්ක මාර්ගය) පුළුල් කිරීමේ ව්යාපෘතිය 2027 අයවැය යෝජනාවලට ඇතුළත් කිරීමට තීරණය විය. මෙයට අදාළ ඉඩම් අත්පත් කරගැනීමේ යෝජනා අනුමත වූ අතර වන්දි ගෙවීමේ ක්රියාවලිය පිළිබඳව මහජනතාව දැනුවත් කිරීමට ද පියවර ගැනේ.
* පැරණි ගාලු පාර: මාතර බෝධිය අසල සිට නූපේ හන්දිය දක්වා පවතින දැඩි රථවාහන තදබදයට විසඳුමක් ලෙස එම කොටස පුළුල් කිරීමට තීරණය විය.
* නූපේ සිට කඹුරුගමුව දක්වා: මාතර නගර සංවර්ධන සැලසුම යටතේ මෙම කොටස මංතීරු හතරක් දක්වා පුළුල් කර සංවර්ධනය කිරීමට සාකච්ඡා කෙරිණි.
* තිහගොඩ සිට මුලටියන දක්වා: මෙම මාර්ගය ද පුළුල් කර නවීකරණය කිරීමට මෙහිදී අවධානය යොමු විය.
මෙම අවස්ථාවට වැලිගම නගර සභාවේ සභාපති මොහොමඩ් අෆ්රාස් මහතා, අමාත්යාංශයේ අතිරේක ලේකම් සරසි ගුණසේකර මහත්මිය ඇතුළු රාජ්ය නිලධාරීන් පිරිසක් සහභාගී වූහ.
Four Major Road Development Projects to be Implemented in Matara District
A special discussion regarding four key road development projects aimed at upgrading the road network and reducing traffic congestion in the Matara district was held today (20) at the Ministry of Transport and Highways. The meeting was presided over by the Deputy Minister of Transport and Highways, Dr. Prasanna Gunasena, with the participation of Deputy Minister of Energy Arkam Ilyas and other high-ranking officials.
The key projects discussed during the meeting include:
* Weligama – Telijjawila Road: It was decided to include the expansion and development of the first mile (Galbokka Road) of this road in the 2027 budget proposals. Proposals for land acquisition were approved, and steps will be taken to properly inform the public regarding the compensation process.
* Old Galle Road: To mitigate heavy traffic congestion, it was discussed to widen the section from the Matara Bodhiya to the Nupe junction.
* Nupe to Kamburugamuwa: Under the Matara city development plan, the section from Kamburugamuwa to Nupe will be expanded into a four-lane road.
* Thihagoda to Mulatiyana: Plans to widen and modernize this road were also reviewed during the discussion.
The Chairman of the Weligama Urban Council, Mohammed Afraz, Additional Secretary to the Ministry Sarasi Gunasekara, and other senior officials from the Road Development Authority and the Weligama Divisional Secretariat attended the event.
மாத்தறையில் நான்கு பிரதான வீதி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானம்
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 20, 2026
Rating:
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 20, 2026
Rating:







கருத்துகள் இல்லை: