காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் உயர்தர மாணவிகளுக்கான விசேட வழிகாட்டல் செயலமர்வு
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் உயர்தர மாணவிகளுக்கான விசேட வழிகாட்டல் செயலமர்வு
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவிகளுக்காக, பல்கலைக்கழக அனுமதியை இலகுவாகப் பெற்றுக்கொள்வது மற்றும் பரீட்சையை வினைத்திறனாக எதிர்கொள்வது தொடர்பான விசேட வழிகாட்டல் செயலமர்வு அண்மையில் (15.04.2026) பாடசாலை மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மீரா பாலிகா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் ஆண்கள் பிரிவு மற்றும் நலன் விரும்பிகளை இணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Meera Balika Collective அமைப்பினால் இந்த அறிவுப்பகிர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச் செயலமர்வில் பின்வரும் வளவாளர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பெறுமதியான ஆலோசனைகளை வழங்கினர்:
வளவாளர்கள்:
1. டாக்டர் பாசில் அக்பர் (MBBS - Colombo, MD, போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு)
2. டாக்டர் எம்.ஆர்.ஏ. சிப்லி (MBBS, ஆதார வைத்தியசாலை, காத்தான்குடி)
3. திருமதி எம்.எஸ். சில்மியா (SLAS, உதவிப் பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், காத்தான்குடி)
இந்த நிகழ்வில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். பரீட்சைக்கான திட்டமிடல் மற்றும் எதிர்கால உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து வளவாளர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தமக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தமது பின்னூட்டங்களின் போது தெரிவித்தனர்.
Meera Balika Collective அமைப்பின் உறுப்பினர்களான பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் (SDEC) பதில் செயலாளர் நிவாஸ் மற்றும் டாக்டர் எம்.ஆர்.ஏ. ஜிப்லி ஆகியோரின் நெறிப்படுத்தலில் இந்த விசேட செயலமர்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
මඩකලපුව කාත්තන්කුඩි මීරා බාලිකා ජාතික පාසලේ උසස් පෙළ සිසුවියන් සඳහා විශේෂ මාර්ගෝපදේශන වැඩමුළුවක්
කාත්තන්කුඩි මීරා බාලිකා ජාතික පාසලේ මෙවර අපොස උසස් පෙළ විභාගයට පෙනී සිටින සිසුවියන් ඉලක්ක කරගනිමින්, විශ්වවිද්යාල ප්රවේශය පහසුවෙන් ලබා ගන්නා ආකාරය සහ විභාගයට සාර්ථකව මුහුණ දෙන ආකාරය පිළිබඳ විශේෂ වැඩමුළුවක් පසුගියදා (15.04.2026) එම පාසල් ශ්රවණාගාරයේදී පැවැත්විණි.
මීරා බාලිකා ජාතික පාසලේ ආදි සිසුන්ගේ පිරිමි අංශය සහ හිතවතුන් එක්ව අලුතින් පිහිටුවන ලද Meera Balika Collective සංවිධානය විසින් මෙම වැඩසටහන සංවිධානය කර තිබුණි.
වැඩමුළුව සඳහා සම්පත් දායකත්වය ලබා දුන් පිරිස:
1. වෛද්ය ෆාසිල් අක්බර් (මඩකලපුව ශික්ෂණ රෝහල)
2. වෛද්ය එම්.ආර්.ඒ. සිබ්ලි (කාත්තන්කුඩි මූලික රෝහල)
3. එම්.එස්. සිල්මියා මහත්මිය (සහකාර ප්රාදේශීය ලේකම්, කාත්තන්කුඩි)
විභාගයට සූදානම් වන සිසුවියන් සහ ඔවුන්ගේ දෙමාපියන් විශාල පිරිසක් මෙම වැඩමුළුවට සහභාගී වූ අතර, සිසුන්ගේ අනාගත අධ්යාපන සැලසුම් සකස් කර ගැනීමට මෙය ඉතා ප්රයෝජනවත් වූ බව ඔවුහු පවසා සිටියහ. පාසල් සංවර්ධන විධායක කමිටුවේ (SDEC) වැඩබලන ලේකම් නිවාස් මහතා සහ වෛද්ය එම්.ආර්.ඒ. සිබ්ලි මහතාගේ සම්බන්ධීකරණයෙන් මෙම වැඩමුළුව සාර්ථකව පවත්වන ලදී.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Special Guidance Workshop for GCE A/L Students at Kattankudy Meera Balika National School
A special guidance workshop titled "How to easily secure university entrance and effectively succeed in exams" was held recently (15.04.2026) for the GCE Advanced Level students of Kattankudy Meera Balika National School.
The event was organized by Meera Balika Collective, a newly formed organization comprising the male alumni and well-wishers of the school. The workshop aimed to provide strategic advice to students appearing for this year's A/L examination and their parents.
Resource Persons:
1. Dr. Fazil Akbar (MBBS - Colombo, MD, Teaching Hospital, Batticaloa)
2. Dr. MRA. Zibly (MBBS, Base Hospital, Kattankudy)
3. Mrs. MS. Silmiya (SLAS, Assistant Divisional Secretary, DS Office, Kattankudy)
A large number of students and parents participated in the session, noting in their feedback that the insights shared by the experts were highly valuable for planning the students' future academic paths. The workshop was successfully coordinated by SDEC Acting Secretary Mr. Niwas and Dr. MRA. Zibly on behalf of the Meera Balika Collective.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 22, 2026
Rating:



கருத்துகள் இல்லை: