கரையோர புகையிரத பயணிகளுக்காக விசேட பேருந்து சேவைகள்; பருவகால அனுமதிப்பத்திரம் மூலம் பயணிக்கலாம்
கரையோர புகையிரத பயணிகளுக்காக விசேட பேருந்து சேவைகள்; பருவகால அனுமதிப்பத்திரம் மூலம் பயணிக்கலாம்
இன்று (24) காலை சாகரிகா புகையிரதம் தடம் புரண்டதால் கரையோர புகையிரத பாதையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்புகளுக்கு மாற்றீடாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) பேருந்துகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சஞ்சீவ கனகரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அதன்படி, இன்று மாலை 04.45 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பெலியத்தை, மாத்தறை மற்றும் காலி ஆகிய இடங்களுக்கு 03 பேருந்துகளும், மாலை 05.00 மணிக்கு அம்பலாங்கொடை மற்றும் ஹிக்கடுவை ஆகிய இடங்களுக்கு 02 பேருந்துகளும், மாலை 06.15 மணிக்கு காலிக்கு 03 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பேருந்துகள் கோட்டை புகையிரத நிலையத்திலிருந்தே பயணிகளை ஏற்றிச் செல்லும் என்பதுடன், இடையில் வேறு பயணிகள் எவரும் ஏற்றப்படமாட்டார்கள்.
இந்தப் பேருந்துகளில் பயணிப்பதற்கு புகையிரத பருவகால அனுமதிப்பத்திரம் (Season Ticket) அல்லது உரிய புகையிரத பயணச்சீட்டு வைத்திருப்பது அவசியமாகும். பயணிகளிடம் இதற்காக மேலதிகமாக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது என இலங்கை போக்குவரத்துச் சபை வலியுறுத்தியுள்ளது. புகையிரதப் போக்குவரத்து சீராகும் வரை பயணிகளின் நலன் கருதி இந்த விசேட சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
මුහුදුබඩ මාර්ගයේ දුම්රිය මගීන් සඳහා විශේෂ බස් රථ සේවාවක්; දුම්රිය වාර ප්රවේශ පත්රයෙන් ගමන් කළ හැකියි
අද (24) උදෑසන සාගරිකා දුම්රිය පීලිපැනීම හේතුවෙන් මුහුදුබඩ දුම්රිය මාර්ගයේ ගමනාගමනයට එල්ල වී ඇති බාධා හමුවේ මගීන්ට පහසුකම් සැලසීම සඳහා ලංකා ගමනාගමන මණ්ඩලයේ (SLTB) බස් රථ යෙදවීමට පියවර ගෙන ඇති බව එහි සභාපති සංජීව කනකරත්න මහතා පවසයි. රජයේ ප්රවෘත්ති දෙපාර්තමේන්තුවේ අද පැවති විශේෂ මාධ්ය හමුවකදී ඔහු මේ බව සඳහන් කළේය.
ඒ අනුව අද පස්වරු 04.45 ට කොටුව දුම්රිය ස්ථානයේ සිට බෙලිඅත්ත, මාතර සහ ගාල්ල දක්වා බස් රථ 03 ක් ද, පස්වරු 05.00 ට අම්බලන්ගොඩ සහ හික්කඩුව දක්වා බස් රථ 02 ක් ද, අවසාන වශයෙන් පස්වරු 06.15 ට ගාල්ල බලා තවත් බස් රථ 03 ක් ද ධාවනය කිරීමට නියමිතය. මෙම බස් රථ කොටුව දුම්රිය ස්ථානයෙන්ම මගීන් පටවා ගන්නා අතර අතරමගදී මගීන් නංවා නොගැනීමට තීරණය කර ඇත.
මෙම බස් රථවල ගමන් කිරීම සඳහා දුම්රිය වාර ප්රවේශ පත්රය හෝ වලංගු දුම්රිය ප්රවේශ පත්රයක් තිබීම අනිවාර්ය වේ. මගීන්ගෙන් අමතර කිසිදු ගාස්තුවක් අය නොකරන බවත්, දුම්රිය ගමනාගමනය යථා තත්ත්වයට පත්වන තෙක් මෙම සේවාව ක්රියාත්මක වන බවත් ලංකා ගමනාගමන මණ්ඩලය වැඩිදුරටත් අවධාරණය කරයි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Special Bus Services for Coastal Line Train Passengers; Train Season Tickets Valid
Following the derailment of the Sagarika express train this morning (24), the Sri Lanka Transport Board (SLTB) has taken measures to deploy special bus services for affected coastal line passengers. This was announced by SLTB Chairman Sanjeewa Kanakarathna during a press conference held at the Government Information Department today.
Accordingly, starting from Colombo Fort Railway Station, 03 buses departed for Beliatta, Matara, and Galle at 04.45 PM. At 05.00 PM, 02 buses were allocated for Ambalangoda and Hikkaduwa, and at 06.15 PM, another 03 buses are scheduled for Galle. These buses will exclusively pick up passengers from the Fort station and will not stop for additional commuters on the way.
Passengers can use these special bus services by presenting their train season tickets or valid train tickets. The SLTB confirmed that no additional fares will be charged from the passengers. This service is aimed at minimizing the inconvenience caused by the ongoing disruptions on the coastal railway line.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 24, 2026
Rating:

கருத்துகள் இல்லை: