எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்
எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்
எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு (G.M.R.D. Aponsu) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று (17) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார். இலங்கை திட்டமிடல் சேவையின் (SLPS) சிரேஷ்ட அதிகாரியான இவர், இதற்கு முன்னர் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.
தேசிய திட்டமிடல், பொது நிதி மேலாண்மை, வரி கொள்கை மற்றும் பொருளாதார முன்கணிப்பு ஆகிய துறைகளில் நீண்டகால அனுபவமிக்க ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, ருஹுனு பல்கலைக்கழகத்தில் பௌதிகவியலில் இளங்கலைப் பட்டத்தையும், கொழும்பு மற்றும் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டங்களையும் பெற்றுள்ளார். தனது அரச சேவைக் காலத்தில் தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களில் இவர் உயர் பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
බලශක්ති අමාත්යාංශයේ නව ලේකම් ලෙස ජී.එම්.ආර්.ඩී. අපොන්සු මහතා පත් කෙරේ
බලශක්ති අමාත්යාංශයේ නව ලේකම්වරයා ලෙස ජී.එම්.ආර්.ඩී. අපොන්සු (G.M.R.D. Aponsu) මහතා ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා විසින් අද (17) පත් කරනු ලැබීය. ඊට අදාළ පත්වීම් ලිපිය ජනාධිපති ලේකම් ආචාර්ය නන්දික සනත් කුමාරනායක මහතා විසින් ජනාධිපති කාර්යාලයේදී ඒ මහතා වෙත පිරිනමන ලදී. ශ්රී ලංකා ක්රමසම්පාදන සේවයේ ජ්යෙෂ්ඨ නිලධාරියෙකු වන ඒ මහතා මීට පෙර ජනාධිපති ජ්යෙෂ්ඨ අතිරේක ලේකම් (මුදල් හා ආර්ථික කටයුතු) ලෙස කටයුතු කර ඇත.
ජාතික ක්රමසම්පාදනය, රාජ්ය මූල්ය කළමනාකරණය සහ ආර්ථික විශ්ලේෂණය පිළිබඳ වසර ගණනාවක පළපුරුද්දක් ඇති අපොන්සු මහතා රුහුණ විශ්වවිද්යාලයේ භෞතික විද්යා විශේෂ උපාධිධාරියෙකි. ඔහු කොළඹ විශ්වවිද්යාලයෙන් සහ ඕස්ට්රේලියානු ජාතික විශ්වවිද්යාලයෙන් පශ්චාත් උපාධි ලබා ඇති අතර ජාතික අයවැය දෙපාර්තමේන්තුව, දේශීය ආදායම් දෙපාර්තමේන්තුව සහ අධ්යාපන අමාත්යාංශය වැනි ආයතන රැසක ප්රමුඛ තනතුරු හොබවා ඇති අත්දැකීම් බහුල නිලධාරියෙකි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
G.M.R.D. Aponsu Appointed as New Secretary to the Ministry of Energy
G.M.R.D. Aponsu has been appointed as the new Secretary to the Ministry of Energy by President Anura Kumara Dissanayake today (17). The letter of appointment was handed over by the Secretary to the President, Dr. Nandika Sanath Kumanayake, at the Presidential Secretariat. A senior officer of the Sri Lanka Planning Service (SLPS), Mr. Aponsu previously served as the Senior Additional Secretary to the President for Financial and Economic Affairs.
With extensive expertise in national planning, public financial management, and economic forecasting, Mr. Aponsu holds a Bachelor’s degree in Physics from the University of Ruhuna and Master’s degrees from the University of Colombo and the Australian National University. Throughout his distinguished career in the public service, he has held significant positions in the Department of National Budget, the Department of Inland Revenue, and the Ministry of Education, bringing a wealth of strategic experience to his new role.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 17, 2026
Rating:
கருத்துகள் இல்லை: