Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் "இலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்" நூல் அறிமுகம்



கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் "இலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்" நூல் அறிமுகம்


சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீன் (Sarjune Jamaldeen) எழுதிய "இலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்" எனும் ஆய்வு நூல் அறிமுக விழா, கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நேற்று (21) வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணி மற்றும் அது தொடர்பான சட்ட ரீதியான விடயங்களை உள்ளடக்கிய ஒரு பன்முக ஆய்வாக இந்நூல் அமையப்பெற்றுள்ளது.


ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். ஸுஹைர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அருட்தந்தை மா. சக்திவேல் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். 'Equity Publishers' சமநீதி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில், சமூக ஆர்வலரும் செயற்பாட்டாளருமான சிராஜ் மஷ்ஹூர் (Siraj Mashoor) நூல் ஆய்வினை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் (Rushdhie Habeeb) சிறப்புரை ஆற்றினார்.


நிகழ்வின் இறுதியில் நூலாசிரியர் சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீன் தனது ஏற்புரையை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் பல்வேறு மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நீதியை நிலைநாட்டும் பயணத்தில் இந்த ஆய்வு நூல் ஒரு முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.


கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கන් வொய்ස්

உள்நாட்டுச் செய்தி


නීතිඥ සර්ජුන් ජමාල්ඩීන් ලියූ "ශ්‍රී ලංකා පාස්කු ප්‍රහාරය: යුක්තිය සහ දඬුවම" කෘතිය එළිදැක්වේ


නීතිඥ සර්ජුන් ජමාල්ඩීන් (Sarjune Jamaldeen) විසින් රචිත "ශ්‍රී ලංකා පාස්කු ප්‍රහාරය: යුක්තිය සහ දඬුවම" නමැති පර්යේෂණාත්මක කෘතිය එළිදැක්වීමේ උත්සවය ඊයේ (21) කොළඹ තැපැල් මූලස්ථාන ශ්‍රවණාගාරයේදී පැවැත්විණි. පාස්කු ප්‍රහාරයේ පසුබිම සහ ඒ සම්බන්ධ නීතිමය කරුණු පිළිබඳ බහුවිධ විශ්ලේෂණයක් මෙම කෘතියට ඇතුළත් වේ.


ජනාධිපති නීතිඥ එම්. එම්. සුහයිර් මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවැති මෙම උත්සවයේ ප්‍රධාන ආරාධිතයා ලෙස මාරිමුත්තු ශක්තිවේල් පියතුමා සහභාගී විය. සමාජ ක්‍රියාකාරී සිරාජ් මෂූර් (Siraj Mashoor) මහතා විසින් ග්‍රන්ථ විචාරය සිදුකළ අතර නීතිඥ රුෂ්ඩි හබීබ් (Rushdhie Habeeb) මහතා විශේෂ දේශනයක් පැවැත්වීය. අනතුරුව කෘතියේ කර්තෘ නීතිඥ සර්ජුන් ජමාල්ඩීන් මහතා සිය ස්තූති කතාව සිදුකළේය. මෙම අවස්ථාවට ආගමික නායකයින් සහ සිවිල් සංවිධාන නියෝජිතයින් රැසක් එක්ව සිටියහ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

දේශීය පුවත්


"Sri Lanka Easter Attacks: Justice and Punishment" Book Launch at Colombo Postal Headquarters


The launch of the book titled "Sri Lanka Easter Attacks: Justice and Punishment," authored by Attorney-at-Law Sarjune Jamaldeen, was held yesterday (21) at the Colombo Postal Headquarters auditorium. The book provides a multifaceted analysis of the background and legal implications surrounding the Easter Sunday attacks.


Presided over by President's Counsel M. M. Zuhair, the event featured Rev. Fr. Marimuttu Sakthivel as the Chief Guest. Social activist Siraj Mashoor conducted the book review, while Attorney-at-Law Rushdhie Habeeb delivered a special address. Author Sarjune Jamaldeen subsequently delivered the vote of thanks. Organized by 'Equity Publishers,' the event was attended by religious leaders, civil society representatives, and social activists.


KR TV Network

KR TV Lankan Voice

Local News

கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் "இலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்" நூல் அறிமுகம் Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 22, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.