Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஈரான், அமெரிக்கா பேச்சு: இஸ்லாமாபாத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மிகத்தீவிரமான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தை நாளை (11) இடம்பெறவுள்ள நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 10,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதால், தலைநகர் முழுவதும் முழு அடைப்பு நிலையில் காணப்படுகிறது.

பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சில தொழில்நுட்பக் காரணங்களால் திட்டமிடப்பட்ட கூட்டம் ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டாலும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஏற்கனவே வருகை தரத் தொடங்கியுள்ளனர்.

குறித்த இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு நல்ல தீர்வு எட்டப்படும் என பாகிஸ்தான் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஈரான், அமெரிக்கா பேச்சு: இஸ்லாமாபாத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு! Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 10, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.