Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

1500 கோடி ரூபாய் இரத்தினக்கல் கொள்ளை கோட்டாபயவுக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு


(ஊடகவியலாளர் சமீஹா) 

2020ஆம் ஆண்டு காலப்பகுதியில், ருவன்வெலிசேய மகா சாய விகாரையின் அசல் சூடாமணிக்கல் ரகசியமாக அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக போலியான சூடாமணிக்கல் பொருத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அசல் சூடாமணிக்கல்லில் இருந்த சுமார் 1,500 கோடி ரூபா பெறுமதியான அரிய இரத்தினக்கற்கள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய விகாரைப் பொறுப்பதிகாரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஒரு பிரபல தொழிலதிபர் இணைந்து அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த கொள்ளையைச் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்பு CID-க்கு முறைப்பாடு செய்யப்பட்டபோதும், அரசியல் அழுத்தம் காரணமாக முறைப்பாட்டாளர்களே கைது செய்யப்பட்டதாக சிவில் சமூகத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்

தற்போது புதிய அரசு பதவியில் இருப்பதால், இந்த விவகாரம் குறித்து முழுமையான, பாரபட்சமற்ற விசாரணை நடத்துமாறு CID பணிப்பாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பௌத்தர்களின் முக்கிய வழிபாட்டுத் தலத்தில் நடந்த இந்த மோசடிக்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சிவில் அமைப்புகளும் மகா சங்கத்தினரும் வலியுறுத்தியுள்ளனர்.

'சிவ் ஹெள பொது பவுர' அமைப்பின் மலியதேவ தேரர், இசுருமினியே சித்தார்த்த தேரர் மற்றும் முக்கிய சிவில் சமூக ஆர்வலரான துலான் சேனாதீர ஆகியோரால் இந்தப் புதிய முறைப்பாட்டுப் பத்திரம் சிஐடி தலைமையகத்தில் நேரில் கையளிக்கப்பட்டது.
1500 கோடி ரூபாய் இரத்தினக்கல் கொள்ளை கோட்டாபயவுக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 29, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.