Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

84 வயதுடைய முதியவருக்கு - பீகார் நீதிமன்றம் மூன்று வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


தீப்ராய் எனும் 84 வயதுடைய முதியவருக்கு - பீகார் நீதிமன்றம் மூன்று வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

1992ஆம் ஆண்டு மேற்படி முதியவர், ஒரு தம்பதியினரை ஒரு குழுவினருடன் சென்று தாக்கியுள்ளார். 

இதனையடுத்து, தீப்ராய் மற்றும் மேலும் நான்கு பேருக்கு எதிராக, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றசாட்டுகளை உள்ளடக்கி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு 34 வருடங்களாக நடந்து வந்த நிலையில், அதன் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. 

அதில் தீப்ராய்-க்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

ஏனைய நான்கு பேருக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து - நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விடயம் என்னவென்றால், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும், வழக்கு நடந்து வந்த காலப் பகுதியில் மரணித்து விட்டனர்.

இது இவ்வாறிருக்க, மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தீப்ராயின் முதுமை மற்றும் அவர் சுயமாக நடக்க முடியாமல் இருக்கின்றமை போன்ற விடயங்களைக் கருத்திற் கொண்ட நீதிமன்றம், அவருக்கு தற்காலிக பிணை வழங்கியுள்ளது. 

(சிரேஷ்ட ஊடகவியலாளர் ULM.மப்ரூக்)
84 வயதுடைய முதியவருக்கு - பீகார் நீதிமன்றம் மூன்று வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 05, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.