Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

திய கல்விச் சீர்திருத்தங்களின் மொடியுல் ஊடாக மாணவர்களைப் பல்துறைசார் கல்விக்கு வழிகாட்டலாம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய


திய கல்விச் சீர்திருத்தங்களின் மொடியுல் ஊடாக மாணவர்களைப் பல்துறைசார் கல்விக்கு வழிகாட்டலாம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய.

புதிய கல்விச் சீர்திருத்தங்களில் அறிமுகப்படுத்தப்படும் 'மொடியுல்' (Module) முறைமை ஊடாக, பல்துறை அறிவை ஒன்றோடொன்று இணைக்கும் பல்ல்துறைசார் கல்விக்கு (Multidisciplinary Education) மாணவர்களை வழிகாட்ட முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

2026 ஜூன் 03 ஆம் திகதி, இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சில் கூடிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான தேசிய வழிநடத்தல் குழுவின் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக்க, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே ஆகியோரின் அங்கத்துவத்தில் இயங்கும் இக்குழு, கல்விச் சீர்திருத்தச் செயன்முறையின் ஐந்து பிரதான தூண்களுக்கு அமைய பணிகளை வழிநடத்துகிறது.


கல்விச் சீர்திருத்தச் செயன்முறையின் பொறுப்பினை ஏற்று, அதன் அனைத்துப் பரிமாணங்களையும் தரப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறைக்கு உட்படுத்தி, உயரிய தரத்திலான கல்விச் சீர்திருத்தங்களை நாட்டிற்கு அறிமுகப்படுத்துவதே இக்குழுவின் பிரதான நோக்கமாகும்.

 
கல்விச் சீர்திருத்தங்களின் ஐந்து பிரதான தூண்களுக்குப் பொறுப்பான உப குழு உறுப்பினர்கள், தத்தமது குழுக்களுக்கான அறிக்கைகளை இதன்போது சமர்ப்பித்ததுடன், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


மாணவர்களுக்குத் தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படாத விதத்திலான, வெற்றிகரமான, சமநிலையான பாடத்திட்டத்தை உருவாக்குவது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

மாணவர்களின் அழகியல், வாழ்க்கைத்திறன் மற்றும் விளையாட்டுத் திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்றும்,மாணவர்களின் தொடர் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அதன் கட்டமைப்பு அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


அத்தோடு, தரம் 01 முதல் 13 வரை கல்விச் சீர்திருத்தச் செயன்முறையின் முழுமையான பரிமாணத்தை உள்ளடக்கி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.


ஆசிரியர் மையங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், தேசிய கல்வியியற் கல்லூரிகளை​ அபிவிருத்தி செய்வதிலும் அரசாங்கம் அதிக கவனத்தைச் செலுத்தியுள்ளதாகப் பாடசாலைக் கட்டமைப்பின் மனிதவள அபிவிருத்தி குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர் சுட்டிக்காட்டினார்.


இந்நிகழ்வில் அமைச்சர்களான கலாநிதி அனுர கருணாதிலக்க, கலாநிதி உபாலி பன்னிலகே, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன பண்டார, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்-அதிபர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
திய கல்விச் சீர்திருத்தங்களின் மொடியுல் ஊடாக மாணவர்களைப் பல்துறைசார் கல்விக்கு வழிகாட்டலாம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 05, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.