கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னரான ஆரம்பக் கலந்துரையாடலிலும் இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம் பெற்றது ஜனாதிபதி கலந்து கொண்டார்.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களினால் 2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்தப்படும் 'சமூகசக்தி' திட்டம் உள்ளிட்ட ஏனைய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இங்கு தனித்தனியாக ஆராயப்பட்டது.
வலுவான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனச் சுட்டிக்காட்டிய நான், ஒவ்வொரு அமைச்சும் தனித்தனியாகப் பணத்தைச் செலவிடுவதற்குப் பதிலாக, பயன் பெற வேண்டிய குடும்ப அலகுகளின் தேவைகளைச் சரியாகக் கண்டறிந்து "குடும்ப அபிவிருத்தித் திட்டம்" ஒன்றினைச் செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், வறுமை ஒழிப்புக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் அனைத்து அரச நிறுவனங்களும் ஒன்றிணைந்து நோக்கத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் இங்கு ஜனாதிபதி வலியுறுத்தினார்
குறைந்த வருமானம் பெறுபவர்களை வெறுமனே நிவாரணங்களில் மட்டும் தங்கியிருக்கச் செய்யாமல், அவர்களைப் பகுதி நேர உழைப்புப் பங்களிப்புகளுக்கு வழிநடத்தி உற்பத்திப் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கச் செய்வதன் முக்கியத்துவத்தையும் மேலும் சுட்டிக்காட்டினார்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள பகல்நேர பராமரிப்பு நிலையங்கள், பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகளை வழங்குதல் போன்ற திட்டங்கள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் செயல்படுத்தப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் போன்ற திட்டங்களை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக மேலும் ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் இங்கு சுட்டிக்காட்டினார்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 07, 2026
Rating:

கருத்துகள் இல்லை: