29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடியில் புதிதாக நிருமனிக்கப்பட்ட தபாலகம் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவினால் திறந்து வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடியில் 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட தபாலகம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இன்று சனிக்கிழமை (25) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த யுத்த காலத்தின்போது முற்றாக அழிவடைந்திருந்த களுவாஞ்சிக்குடி தபாலகம் இதுவரை காலமும் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்திருந்தது.
இத்தபாலகத்திற்குரிய நிலப்பரப்பு இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வந்திருந்த நிலையில் அது அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டு தற்போது 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக தபாலகம் அமைக்கப்பட்டு அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.
அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் கடந்த 18.09.2025 அன்று இந்த புதிய தபாலக காரியாலயத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்தருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார, பிரதி அஞ்சல் மா அதிபர் உசித்த உலங்கமே, கிழக்கு மாகாண தபால் மா அதிபர் சி.பிரகாஷ், மற்றும், அரச உயர் அதிகாரிகள், தபால் நிணைக்கள அதிகாரிகள், பொது மக்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 25, 2026
Rating:

கருத்துகள் இல்லை: