Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමග) ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி முதல் ஊழல் ஒழிப்பு வரை: புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் NPPயின் அரசியல் பயணம்.


ஈஸ்ட்டர் குண்டுத்தாக்குதலுக்கு எதிரான முதல் கட்ட நீதி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், உண்மையான சூத்திரதாரிகளை வெளிக்கொணரும் விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களையும் விமர்சனங்களையும் கடந்து, மாற்றத்தை விரும்பும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஒரு புதிய இலங்கையை உருவாக்கும் பயணம் தொடர்கிறது.

ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் போதே மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு நிலையான தீர்வை உருவாக்க முடியும். இதுவே தேசிய மக்கள் சக்தியின் கொள்கை ரீதியான அரைசியல் பாதையின் அடிப்படை அம்சமாக இருக்கின்றது.


தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்றபோது, “மூன்று மாதங்கள்கூட தாக்குப்பிடிக்காது” என எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். ஆனால், அந்தக் கணிப்புகளை முறியடித்து, நாட்டில் ஊழல் ஒழிப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் இன–மத பேதமற்ற அமைதியான சூழலை உருவாக்கும் பாதையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பயணித்து வருகிறது.

இந்த நிலையில், ஈஸ்ட்டர் குண்டுத்தாக்குதல் இடம்பெற்று ஏழு வருடங்கள் கடந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் நீண்ட கால கண்ணீருக்கும் கோரிக்கைக்கும் இந்த இரண்டு வருட தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் முதற்கட்ட நீதி கிடைத்துள்ளது. பல தசாப்தங்களாக அரசியல் இலாபங்களுக்காகவும் அதிகார மோகத்துக்காகவும் மணக் கோப்பையில் சூதாடப்பட்ட இந்த வழக்கிற்கு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்த குறுகிய காலத்திற்குள் தீர்வு கண்டுள்ளது.


நீதித்துறையும் பொலிஸ்த்துறையும் முழுமையாகச் சுயாதீனமாக்கப்பட்டதன் விளைவாக, இனியும் இந்த நாட்டை எவராலும் ஏமாற்ற முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு பறைசாற்றியுள்ளது. "மூன்று மாதங்கள் கூட இந்த அரசு தாக்குப் பிடிக்காது" என்று மிரட்டிய பல தலைவர்களுக்கு இந்த அதிரடித் தீர்ப்பு ஒரு தெளிவான செய்தியையும்அச்சத்தையும் கொடுத்துள்ளது.

இனிவரும் நாட்களில், இந்தத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார், இதன் பின்னணியில் இருந்த சுயநல அரசியல் சக்திகள் எவை என்பதும் மிக விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இந்த அரசாங்கத்தின் பக்கம் நிற்கிறார்கள். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தின் ஆத்மாக்களும் இந்த நீதியினால் அமைதியடையும்.

ஆனால் இது முடிவு அல்ல. எங்கள் அன்புக்குரியவர்கள் ஏன், எதற்காக கொல்லப்பட்டார்கள்? இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்ற பாதிக்கப்பட்ட மக்களின் கேள்விகளுக்கு முழுமையான விடையினை ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள்சக்தி அரசாங்கம் கொடுக்கும் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்ட மக்கள்மத்தியில் வலுப்பெற்றுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளில் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி சுரேஷ் சலே, முன்னாள்  பாராளுமன்ற சிவனேசத்துறை சந்திர காநௌதன் உள்ளிட்டோர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், உண்மையின் முழுப் பின்னணியையும் சட்டத்தின் அடிப்படையில் வெளிக்கொணர வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கும் உள்ளது.

அரசியல் தலையீடற்ற நீதி வேண்டும்:-

குற்றவாளி யார் என்ற கேள்விக்கு அல்ல பதில், மாறாக உண்மை என்ன என்ற கேள்விக்கே பதில் வேண்டும் என்ற உண்மைத் தத்துவத்துக்கு அமைவாக
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த ஒவ்வொரு அப்பாவி உயிருக்கும் முழுமையான நீதி கிடைக்கும் வரை இந்தப் பயணம் தொடர வேண்டும் என்பதில் ஜனாதிபதியும் தேசிய மக்கள்சக்தி அரசாங்கமும் நேரான பாதையில் பயணித்து வருகின்றது.

அந்த வகையில் மூன்று மாதங்கள் அல்ல இரண்டு வருடங்களையும் தாண்டி மக்கள் மனங்களில் நம்பிக்கை எனும் பலமான அடித்தளைத்தை உருவாக்கியுள்ள தேசிய மக்கள் அரசாங்கமானது, சுதந்திரத்திற்குப் பின்னரான பல தசாப்தங்களில் அரசியல் அதிகாரம் தனிப்பட்ட சலுகைகளுக்கும், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கும் பயன்படுத்தப்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். அந்த நிலைமையை மாற்றாமல் மக்களின் பொருளாதார மற்றும் சமூக எதிர்பார்ப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்க முடியாது என்பதில் திடமான அரசியல் கொள்கை மற்றும் மாற்றத்தை நோக்கிய அரசியல் பயணத்தை NPP தொடர்கின்றது.


மக்களுக்கு எதிர்பார்ப்புகளுக்கும்,  அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும். ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை நிலையான முறையில் நிறைவேற்றுவதற்கு முதலில் நாட்டில் வேரூன்றியுள்ள ஊழல் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களும், ஊழலில் ஈடுபட்டவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

அதனால், மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் ஊழல் கலாசாரத்தை முதலில் முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தெளிவான நிலைப்பாடாக இருக்கின்றது. கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

"ஊழலை ஒழிப்பது பழிவாங்கல் அல்ல! மக்களின் பணத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் அரசுப் பொறுப்பு". ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் போதே மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு நிலையான தீர்வை உருவாக்க முடியும். இதுவே தேசிய மக்கள் சக்தியின் கொள்கை ரீதியான புதிய அரசியல் பாதையின் அடிப்படை அம்சமாக இருக்கின்றது.

சுதந்திரத்திற்குப் பின்னரான 76 ஆண்டுகளாக இந்த நாட்டின் அரசியல், நிர்வாகம் மற்றும் அதிகாரக் கட்டமைப்புகளில் வேரூன்றியிருந்த சுரண்டல், ஊழல், இலஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, புதியதொரு இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் தான் மக்கள் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படைத்தனர். அது வெறுமனே ஒரு சாதாரண தேர்தல் வெற்றியை வழங்கிய முடிவாக கணித்துவிட முடியாது. பழைய அரசியல் கலாச்சாரத்தை நிராகரித்து, புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்க வேண்டும் என்ற மக்களின் வரலாற்றுத் தீர்ப்பாகும்.

அந்த மகத்தான நம்பிக்கையை நனவாக்குவது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மிகப்பெரும் பொறுப்பாகும். ஊழலற்ற நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இனமும் மதமும் பிரிக்கும் கோடுகளைத் தாண்டி அனைத்து மக்களும் இலங்கையர் என்ற ஒரே அடையாளத்துடன் நிம்மதியாகவும், கௌரவமாகவும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவதே இந்த அரசாங்கத்தின் வரலாற்றுக் கடமையாகும்.

எதிர்க்கட்சியினர் எவ்வளவு கூக்குரலிட்டாலும், எத்தனை அரசியல் பூச்சாண்டிகளைக் காட்டினாலும், அதிகாரத்தை மக்களின் நம்பிக்கையுடன் பெற்ற அரசாங்கத்தை வெறும் சத்தத்தாலும், அச்சுறுத்தல்களாலும் திசைதிருப்பி விட முடியாது. ஏனெனில் இந்த அரசாங்கத்தின் பின்னால் இருப்பது வெறும் ஒரு கட்சியின் ஆதரவோ அல்லது சன்மானங்களு பின்னால் கிடைத்த வாக்கு வங்கியோ அல்ல. மாற்றத்தை விரும்பிய மக்களின் எதிர்பார்ப்பும், புதிய அரசியல் கலாச்சாரத்திற்கான அவர்களின் பேரவாவும் ஆகும்.

புத்திஜீவிகள், நடுநிலைச் சிந்தனையாளர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அடித்தட்டு மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் என சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் நாட்டை மீண்டும் பழைய பாதைக்கு கொண்டு செல்லக் கூடாது என்ற தெளிவான நிலைப்பாட்டுடன் புதிய அரசியல் பயணத்தை அவதானித்து வருகின்றனர். அரசாங்கத்தின் கொள்கைகள் நடைமுறையில் பலன் அளிக்கும் வரை, மக்கள் தங்களுடைய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திக்கொண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் முழுமனதுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் பயணித்து வருகின்றார்கள்.

"இது ஒரு தனிநபருக்கான ஆதரவு மட்டுமல்ல; ஊழலற்ற இலங்கைக்கான ஆதரவு. இது ஒரு அரசாங்கத்திற்கான ஆதரவு மட்டுமல்ல; மக்களின் கௌரவத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய அரசியல் கலாச்சாரத்திற்கான ஆதரவாகும்".

அதிகாரம் என்பது சலுகைக்காக அல்ல, அது  மக்களுக்கான சமூகப் பொறுப்பாகும்!
அரசியல் என்பது ஊதியம், சலுகை, ஆடம்பரம், தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் பாதையும் அல்ல. அது மக்களிடம் இருந்து பெறப்படும் நம்பிக்கைக்கு பதிலளிக்கும் ஒரு சமூகப் பொறுப்பும், தார்மீகக் கடமையும் ஆகும்.

அந்த அரசியல் பண்பாட்டை தனது நடைமுறையால் வெளிப்படுத்தி வருகிறார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க. நிறைவேற்று அதிகாரம் கொண்ட நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோதிலும், தனக்காக குடை பிடிக்க ஒருவர் தேவையில்லை. காரின் கதவைத் திறக்க ஒருவர் தேவையில்லை. தனது அன்றாடத் தேவைகளைத் தானே நிறை வேற்றிக்கொள்ளும் எளிமையான தலைவராக அவர் வெளிப்படுத்தும் இத்தகைய அணுகுமுறை, பதவி என்பது மக்களிடமிருந்து பெறப்படும் சலுகை அல்ல, பொறுப்பு என்பதை நாட்டு மக்களுக்கு நினைவூட்டும்படியாக உள்ளது.

இது வெறும் தனிப்பட்ட எளிமை அல்ல. பல தசாப்தங்களாக அதிகாரத்தைச் சுற்றி உருவாக்கப்பட்டிருந்த ஆடம்பர அரசியல் கலாச்சாரத்துக்கு எதிரான ஒரு நிலையான மாற்றத்தை நோக்கிய அரசியல் செய்தியாகும். அதிகாரத்தில் இருப்பவர் மக்களுக்கு மேலானவர் அல்ல என்பதும், மக்களுக்காகப் பணியாற்ற வேண்டியவர் என்பதே அதன் அடிப்படை உண்மையுமாகும்.

நாட்டு மக்கள் எதிர்பார்த்த அரசியல் மாற்றமும் இதுதான். மாற்றம் எங்கிருந்து தொடங்க வேண்டுமோ, அங்கிருந்தே தொடங்க வேண்டும். அந்த மாற்றத்தை அரசியல்வாதிகளின் நடத்தையிலிருந்து ஆரம்பிப்பதே தேசிய மக்கள் சக்தி முன்வைக்கும் புதிய அரசியல் கலாச்சாரத்தின் முக்கியத்துவமாகும்.

ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் மாறினால் போதாது. அரச நிர்வாகமும் மாற வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு நிறுவனமும் மாற வேண்டும். இறுதியில், “அரசியல்வாதிக்கு சேவை செய்வது” என்ற மன நிலையிலிருந்து “மக்களுக்கு சேவை செய்வது” என்ற மன நிலைக்கு முழு சமூகமும் நகர வேண்டும்.
அதுவே உண்மையான அரசியல் மாற்றம்.
அதிகாரம் என்பது மக்களுக்காக இருக்க வேண்டும் தவிர, மக்கள் அதிகாரத்தினை எதிர்பார்ப்பவர்களாக இருக்க கூடாது.

ஆகவே, சத்தமிடும் அரசியலைவிட மாற்றத்தை உருவாக்கும் அரசியலே இன்று நாட்டிற்குத் தேவை. அந்த மாற்றப் பயணத்தில் மக்கள் நம்பிக்கையுடன் அரசாங்கத்துடன் நிற்கும் வரை, பழைய அரசியல் கலாச்சாரத்தின் கார்ட்போர்ட் அரசியல்வாதிகளால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய இலங்கைக் கட்டுமானப் பயணத்தை தடுத்து நிறுத்தி விட முடியாது.

மக்களின் நம்பிக்கையே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பலம்; மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே தேசிய மக்கள் சக்தியின் வரலாற்றுப் பொறுப்பு!

இது ஒரு அரசாங்கத்தைப் பாதுகாக்கும் போராட்டம் அல்ல; ஒரு புதிய இலங்கையை உருவாக்கும் மக்கள் போராட்டம். மக்களின் தீர்ப்பை எந்தக் கார்ட்போர்ட் அரசியல்வாதியாலும் மாற்ற முடியாது என்பதே உண்மை.

அஹமட் இர்ஷாட்.
24-09-2026

යුක්තියේ සිට පාස්කු ප්‍රහාරය දක්වා දූෂණ විරෝධී දක්වා: නව දේශපාලන සංස්කෘතියක් නිර්මාණය කරමින් එන්පීපීයේ දේශපාලන ගමන.

පාස්කු ප්‍රහාරයට එරෙහි යුක්තිය පසිඳලීමේ පළමු අදියර ජාතික ජන බලවේගයේ රජය යටතේ තහවුරු වී ඇති අතර සැබෑ මහ මොළකරුවන් අනාවරණය කර ගැනීමේ පරීක්ෂණ තීව්‍ර කර ඇත.

දේශපාලකයන්ගේ තර්ජන සහ විවේචන අභිබවා නව ශ්‍රී ලංකාවක් බිහි කිරීමේ ගමන ඉදිරියට යන්නේ වෙනසක් අපේක්ෂා කරන මිනිසුන්ගේ අචල විශ්වාසයෙනි.

දූෂණය අවසන් කරන අතරම ජනතාවගේ අපේක්ෂාවන් සපුරාලීම සඳහා තිරසාර විසඳුමක් නිර්මාණය කළ හැකිය. ජාතික ජන බලයේ ප්‍රතිපත්තිමය මාවතේ මූලික අංගය මෙයයි.

ජාතික ජන බලවේගය ආණ්ඩුව භාර ගන්නා විට විපක්ෂය විවේචනය කළේ “මාස තුනක්වත් ශක්තිමත් නැහැ” කියායි. නමුත් අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමා ප්‍රමුඛ රජය අනාවැකි කඩකරමින් රටේ දූෂණය තුරන් කරමින් කුල ආගම්වලින් තොර සාමකාමී පරිසරයක් නිර්මාණය කිරීමේ මාවතේ ගමන් කරමින් සිටිනවා.

පාස්කු බෝම්බ ප්‍රහාරයෙන් වසර හතක් ගතවී ඇති මේ මොහොතේ වින්දිතයන්ගේ දීර්ඝ කාලීන කඳුළු සහ ඉල්ලීම් සඳහා වසර දෙකක ජාතික ජන බල පාලනය තුළ මූලික යුක්තිය ඉටු වී තිබේ. දශක ගණනාවක් තිස්සේ දේශපාලන වාසි සහ බල තෘෂ්ණාව වෙනුවෙන් ක්‍රීඩා කළ මෙම නඩුව ජාතික ජනබල ආණ්ඩුවේ කෙටි කාලය තුළ විසඳා ඇත.

අධිකරණයේ සහ පොලිසියේ පූර්ණ ස්වාධීනත්වයේ ප්‍රතිඵලයක් ලෙස මේ රට තවදුරටත් කිසිවකුට වංචා කළ නොහැකි බව මෙම නඩු තීන්දුවෙන් ප්‍රකාශ කර ඇත. "මේ ආණ්ඩුව මාස තුනකටවත් පවතින්නෙ නෑ" යැයි තර්ජනය කළ බොහෝ නායකයින්ට මෙම ක්‍රියාකාරී තීන්දුව මගින් පැහැදිලි පණිවිඩයක් සහ බියක් ලබා දී ඇත.

ඉදිරි දින කිහිපයේදී මෙම ප්‍රහාරයේ සැබෑ මහ මොළකරුවන් කවුරුන්ද, ඒ පිටුපස සිටින ආත්මාර්ථකාමී දේශපාලන බලවේග මොනවාද යන්න ඉතා ඉක්මනින්ම හෙළිවනු ඇතැයි මුළු මහත් ජාතියම මේ ආණ්ඩුවට මුල් බැසගෙන සිටින්නේ නොසැලෙන බලාපොරොත්තුවකිනි. විපතට පත් සෑම පවුලකගේම ආත්මයන් මේ යුක්තියෙන් නිවන් සුව ලැබේවා.

නමුත් මෙය අවසානය නොවේ. අපගේ ආදරණීයයන් මරා දැමුවේ ඇයි සහ ඇයි? මේ පිටුපස සිටියේ කවුද? ජනාධිපතිවරයා ප්‍රමුඛ ජාතික ජන බලවේගය රජය විපතට පත් ජනතාවගේ ප්‍රශ්නවලට සම්පූර්ණ පිළිතුරු ලබා දෙනු ඇතැයි යන බලාපොරොත්තුව විපතට පත් ජනතාව තුළ ශක්තිමත් වී තිබේ.

පාස්කු ප්‍රහාරයට අදාළ වැඩිදුර විමර්ශනවලදී හිටපු බුද්ධි අංශ නිලධාරි සුරේෂ් සාලේ, හිටපු පාර්ලිමේන්තු මන්ත්‍රී ශිව් නේසතුරෙයි චන්ද්‍ර කනවුතන් ඇතුළු පිරිසක් විමර්ශනය කර ඇති අතර, නීතිය මත පදනම්ව සත්‍යයේ සම්පූර්ණ පසුබිම හෙළි කිරීමේ වගකීම රජයට සහ නීතිය ක්‍රියාත්මක කරන ආයතනවලට පැවරී ඇත.

දේශපාලන මැදිහත්වීම් වලින් නිදහස් යුක්තිය අපට අවශ්‍යයි:-

සත්‍යයේ න්‍යායට අනුව උත්තරය ඇත්තේ වරදකරු කවුද යන ප්‍රශ්නයට නොව සත්‍යය කුමක්ද යන ප්‍රශ්නයටය.
පාස්කු ප්‍රහාරයෙන් අහිමි වූ සෑම අහිංසක ජීවිතයකටම පූර්ණ යුක්තිය ඉටු වන තුරු මේ ගමන ඉදිරියට ගෙන යාමට ජනාධිපතිතුමා සහ ජාතික ජන බලවේගය රජය නිවැරදි මාවතේ ගමන් කරමින් සිටී.

ඒ ආකාරයට වසර දෙකක් නොව මාස තුනකට එහා ජනතාව තුළ විශ්වාසයේ ශක්තිමත් පදනමක් ගොඩනැගූ ජාතික ජනතා ආණ්ඩුව නිදහසින් පසු දශක කිහිපය තුළ දේශපාලන බලය පුද්ගලික වාසි, දූෂණ සහ බලය අවභාවිතය සඳහා යොදාගත් බවට ජනතා චෝදනා එල්ල විය. NPP ස්ථාවර දේශපාලන ප්‍රතිපත්තියක් කරා තම දේශපාලන ගමන දිගටම කරගෙන යන අතර එම තත්ත්වය වෙනස් නොකර ජනතාවගේ ආර්ථික හා සමාජීය අපේක්ෂාවන්ට ස්ථිර විසඳුමක් ලබා දිය නොහැක.

මිනිසුන්ගේ බලාපොරොත්තු සහ ගැටලුවලට විසඳුම් අවශ්‍යයි. එහෙත් එම අපේක්ෂාවන් තිරසාර ලෙස ඉටුකර ගැනීමට නම් පළමුව රටේ මුල් බැසගත් දූෂණය මුළුමනින්ම පිටුදැකිය යුතුය. දේශපාලන බලය පාවිච්චි කරලා ජනතා මුදල් කොල්ල කෑ අය, දූෂණවලට සම්බන්ධ අය නීතිය ඉදිරියට පමුණුවා දඬුවම් දිය යුතුයි.

ඒ නිසා අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමාගේ පැහැදිලි ස්ථාවරය තමයි ජනතාවගේ මුදල් හොරා කන දූෂණ සංස්කෘතිය මුලින්ම සම්පූර්ණයෙන්ම නැති කළ යුතුයි කියන එක. පහුගිය කාලයේ දේශපාලන බලය පාවිච්චි කරලා මිනිස්සුන්ව දූෂිත කරපු අය කවුරු වුණත් නීතිය ඉදිරියට පමුණුවා දඬුවම් දිය යුතුයි.

"දූෂණය නැති කිරීම පළිගැනීමක් නොවේ! ජනතාවගේ මුදල් සහ රටේ අනාගතය ආරක්ෂා කිරීම රජයේ වගකීමක්". දූෂණය අවසන් කරන අතරම ජනතාවගේ අපේක්ෂාවන් සපුරාලීම සඳහා තිරසාර විසඳුමක් නිර්මාණය කළ හැකිය. ජාතික ජන බලයේ ප්‍රතිපත්තිගරුක නව දේශපාලන මාවතේ මූලික අංගය මෙයයි.

නිදහසින් පසු වසර 76ක් රටේ දේශපාලන, පරිපාලන, බල ව්‍යුහය තුළ මුල් බැසගෙන තිබූ සූරාකෑම, දූෂණය, අල්ලස, බලය අනිසි ලෙස භාවිතා කිරීමේ සංස්කෘතියට තිත තබමින් ජනතාව ජාතික ජන බලයට රටේ පාලනය භාර දුන්නේ නව ශ්‍රී ලංකාවක් ගොඩනැගීමේ බලාපොරොත්තුව සහ අපේක්ෂාවෙනි. එය සාමාන්‍ය මැතිවරණ ජයග්‍රහණයකින් ලැබෙන ප්‍රතිඵලයක් ලෙස සරලව අනාවැකි කිව නොහැක. පැරණි දේශපාලන සංස්කෘතිය ප්‍රතික්ෂේප කර නව දේශපාලන සංස්කෘතියක් ඇති කිරීම ජනතාව ගත් ඓතිහාසික තීරණයයි.

ඒ උතුම් බලාපොරොත්තුව අවබෝධ කර ගනිමින් අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමා ප්‍රමුඛ ජාතික ජන බලවේගයේ ආණ්ඩුවේ ලොකුම වගකීමයි. දූෂණයෙන් තොර පාලනයක්, නීතියේ ආධිපත්‍යය, විනිවිදභාවය, වගවීම සහ සමානාත්මතාවය මත පදනම් වූ, ජාති ආගම් භේදයකින් තොරව සියලු ජනතාවට ශ්‍රී ලාංකිකයන් ලෙස එකම අනන්‍යතාවයෙන් සාමයෙන් හා අභිමානයෙන් ජීවත් විය හැකි රටක් ගොඩනැගීම මේ රජයේ ඓතිහාසික යුතුකමයි.

විපක්ෂය කොච්චර කෑගැහුවත්, මොනතරම් දේශපාලන කපටිකම් පෙන්නුවත්, ජනතා විශ්වාසය ඇතිව බලය ලබාගත් ආණ්ඩුව හුදු සද්දෙන්, තර්ජනවලින් වෙන පැත්තකට හරවන්න බැහැ. මක්නිසාද යත් මේ ආණ්ඩුව පිටුපස ඇත්තේ පඬුරු පිටුපස පක්‍ෂයක හෝ ඡන්ද බැංකුවේ සහාය පමණක් නොවන බැවිනි. එය වෙනසක් අපේක්ෂා කළ ජනතාවගේ අපේක්ෂාව සහ නව දේශපාලන සංස්කෘතියක් සඳහා වූ ඔවුන්ගේ අපේක්ෂාවයි.

බුද්ධිමතුන්, මධ්‍යස්ථ චින්තකයින්, තරුණයන්, ගොවියන්, කම්කරුවන්, බිම් මට්ටමේ, මධ්‍යම පාන්තික ආදී සමාජයේ විවිධ පිරිස් නව දේශපාලන ගමන නිරීක්ෂණය කරමින් සිටින්නේ රට යළි පරණ මාවතට ගෙන නොයා යුතුය යන පැහැදිලි ස්ථාවරයෙනි. ආණ්ඩුවේ ප්‍රතිපත්ති ප්‍රායෝගිකව ඵල දරන තාක් කල් ජනතාව තම විශ්වාසය ශක්තිමත් කරගෙන මුළු හදවතින්ම විනිවිදභාවයෙන් යුතුව අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමා සමඟ ගමන් කරනවා.

එය තනි පුද්ගලයකුට උපකාර කිරීම පමණක් නොවේ; දූෂණයෙන් තොර ශ්‍රී ලංකාවක් සඳහා සහයෝගය. එය රජයකට සහාය දීම පමණක් නොවේ; ජනතාවගේ ගෞරවය සහ අයිතිවාසිකම් ආරක්ෂා කරන නව දේශපාලන සංස්කෘතියක් සඳහා සහාය.

බලය යනු වරප්‍රසාදයක් නොවේ, එය ජනතාවට සමාජ වගකීමකි!
දේශපාලනය යනු වැටුප්, වරප්‍රසාද, සුඛෝපභෝගිත්වය සහ පුද්ගලික අපේක්ෂාවන් ඉටුකිරීමේ මාවතක් නොවේ. ජනතාවගෙන් ලැබෙන විශ්වාසයට ප්‍රතිචාර දැක්වීම සමාජ වගකීමක් සහ සදාචාරාත්මක වගකීමක්.

ඒ දේශපාලන සංස්කෘතිය අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමා තම භාවිතාවෙන් පෙන්වමින් සිටිනවා. විධායක බලතල තියෙන රටක ජනාධිපති වුණාට කුඩේ අල්ලන්න කෙනෙක් අවශ්‍ය නැහැ. කාර් එකේ දොර අරින්න කෙනෙක් ඕන නෑ. තම දෛනික අවශ්‍යතා තමන් විසින්ම ඉටුකර ගන්නා සරල නායකයකු ලෙස ඔහුගේ ආකල්පය මහජනතාවට මතක් කර දෙන්නේ තනතුර වරප්‍රසාදයක් නොව වගකීමක් බවයි.

මෙය පුද්ගලික සරල බව පමණක් නොවේ. දශක ගණනාවක් තිස්සේ බලය වටා ගොඩනැගුණු සුඛෝපභෝගී දේශපාලන සංස්කෘතියට එරෙහිව තිරසාර වෙනසක් කරා යන දේශපාලන පණිවිඩයකි. එහි මූලික සත්‍යය වන්නේ බලයේ සිටින පුද්ගලයා ජනතාවට වඩා ඉහළින් නොසිටින අතර ජනතාව වෙනුවෙන් කටයුතු කළ යුතු බවයි.

රටේ ජනතාව බලාපොරොත්තු වන දේශපාලන වෙනස එයයි. වෙනස් විය යුතු තැනින් ආරම්භ විය යුතුය. ජාතික ජන බලය යෝජනා කරන නව දේශපාලන සංස්කෘතියේ වැදගත්කම වන්නේ දේශපාලකයන්ගේ හැසිරීමෙන් එම වෙනස ආරම්භ කිරීමයි.

නමුත් දේශපාලනඥයන් වෙනස් කිරීම පමණක් ප්‍රමාණවත් නොවේ. රජයේ පරිපාලනයත් වෙනස් විය යුතුයි. බලය පාවිච්චි කරන සෑම ආයතනයක්ම වෙනස් විය යුතුයි. අවසාන වශයෙන්, සමස්ත සමාජයම "දේශපාලකයාට සේවය කරන" මානසිකත්වයේ සිට "ජනතාවට සේවය කරන" මානසිකත්වයකට ගමන් කළ යුතුය.
ඒක තමයි සැබෑ දේශපාලන වෙනස.
බලය ජනතාව සඳහා විය යුතු අතර ජනතාව බලය අපේක්ෂා නොකළ යුතුය.

ඒ නිසා ඝෝෂාකාරී දේශපාලනයට වඩා වෙනසක් ඇති කරන දේශපාලනයක් අද රටට අවශ්‍යයි. ඒ වෙනස්වීමේ ගමනේ දී ජනතාව ආණ්ඩුව සමඟ සිටින තුරු පැරණි දේශපාලන සංස්කෘතියේ කාඩ්බෝඩ් දේශපාලනඥයන්ට අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමා ප්‍රමුඛ නව ශ්‍රී ලංකාවක් ගොඩනැගීමේ ගමන නතර කළ නොහැක.

අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමාගේ ශක්තිය ජනතාවගේ විශ්වාසයයි. ජාතික ජන බලවේගයේ ඓතිහාසික වගකීම ජනතා අපේක්ෂා ඉටුකිරීමයි!

මෙය ආණ්ඩුවක් රැක ගැනීමේ අරගලයක් නොවේ; නව ශ්‍රී ලංකාවක් බිහිකිරීමේ ජනතා අරගලයක්. සත්‍යය නම් කිසිම කාඩ්බෝඩ් දේශපාලකයෙකුට ජනතා විනිශ්චය වෙනස් කළ නොහැකි බවයි.

අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් සඟරාව සඳහා,
24-09-2026
සිංහල පරිවර්තනය සමග) ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி முதல் ஊழல் ஒழிப்பு வரை: புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் NPPயின் அரசியல் பயணம். Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 24, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.