Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இன்றைய சூழ்நிலையில் 30 வருட சேவைக் காலத்தையும்,55 வயதையும் பூர்த்தி செய்த அரச ஊழியர்கள் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தலே புத்திசாதுரியமானது! ந.சந்திரகுமார் SLPS


மேற்படி சேவைக் காலத்தை பூர்த்தி செய்யும் போது அடிப்படைச் சம்பளத்தில் 85-90% ஐ ( பணிக் கொடையை விரும்பாதவர்கள்) ஓய்வூதியமாகப் பெறலாம். பணிக் கொடையை விரும்பும் ஊழியர்கள் 75-80% ஐப் ஓய்வூதியமாகப் பெறலாம்.

உதாரணமாக பணிக்கொடையை விரும்பாத ஒருவர்,ஓய்வு பெறும் போது அடிப்படைச் சம்பளம் 50,000/-எனில்  ஓய்வூதியமாக (85%-90%) 42,500/- தொடக்கம் 45,000/-யும், வாழ்க்கை செலவுப் படியாக 6.025/-யும் பெறலாம். தற்போது பெறும் மொத்த சம்பளத்தில் 15,000/- தொடக்கம் 20,000/- மட்டுமே குறைவடையும்.ஆனால் இதன் மூலம் கிடைக்கும் அனுகூலங்கள்..


போக்குவரத்துக்காக செலவிடும் பெருந் தொகை பணத்தை சேமிக்கலாம்.

*அடிப்படை சம்பளத்தில் ஓய்வூதியத்திற்காக கழிக்கப்படும் 6-7% பணத்தை சேமிக்கலாம்.

*நலன்புரி சேவைக்காக அறவிடப்படும் நிதியைப் சேமிக்கலாம்.

*அலுவலக ஆடைகள் மற்றும் ஏனைய செலவுகள் மீதப் படுத்தலாம்.

*தனியார் துறையில்/ சுயதொழில் மூலம் மேலதிக வருமானத்தை ஈட்டலாம்.

*உயர் அதிகாரிகளின் தொல்லை/ சக ஊழியர்களின் தொல்லை நீங்கும்.

*வேலைப் பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்.

*குடும்பத்தினருடன் அதிகளவு நேரத்தை செலவிடலாம்.

*ஓய்வூதிய பணிக்கொடையை நிரந்தர வைப்பு செய்தால், கிடைக்கும் வட்டித் தொகை, சம்பளத்தில் ஏற்படும் குறைவை ஈடு செய்ய முடியும். 

அதேவேளை 50 வயதைப் பூர்த்தி செய்த/20 வருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்த ஆசிரியைகள், மருத்துவ தாதியர்,மருத்துவ மாது,பெண் பொலிஸ் உத்தியோகத்தர், சிறைச்சாலை பெண் ஊழியர் ஆகியோர் ஓய்வு பெறும் போது, உடனடியாக பணிக் கொடை மற்றும் ஓய்வூதியத்தை பெறலாம்.


மேலும் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் 30 வருட சேவைக் காலத்தையும்,55 வயதையும் பூர்த்தி செய்த அரச ஊழியர்கள் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தலே புத்திசாதுரியமானது! ந.சந்திரகுமார் SLPS Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 03, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.