Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

34 ஆண்டுகாலம் மருத்துவ பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றார் டாக்டர் அலிமா ரஹ்மான். நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தது காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பு


காத்தான்குடியின் முதல் பெண் வைத்தியர் 
சுமார் 34 ஆண்டுகளாக மருத்துவத் துறையில் அர்ப்பணிப்புடனும், மனிதநேய உணர்வுடனும் சேவையாற்றி, குறிப்பாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பாளராக பணியாற்றிய  டாக்டர் அலிமா ரஹ்மான் அவர்கள் ஓய்வுபெறுவதை முன்னிட்டு, அவருடைய சிறப்புமிக்க சேவைகளைப் பாராட்டும் வகையில்  காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் சார்பில்  அவருக்கு நினைவுச் சின்னம் (Shield) வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் MHS.ஹமீட் தலைமையில் அமைப்பின் கரியலயத்தில் இடம்பெற்றது.


தனது பணிக்காலம் முழுவதும் நோயாளிகளின் நலனையே முதன்மையாகக் கொண்டு, கருணை, அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வுடன் மருத்துவச் சேவையாற்றியதோடு, காத்தான்குடி இரத்த வங்கியின் பொறுப்பாளராக இருந்து பாதுகாப்பான இரத்த சேவையை மேம்படுத்தவும், அவசரகாலங்களில் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றவும், இரத்ததானம் தொடர்பான விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் பெறுமதியானதாகும்.


காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பு தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் இரத்ததான முகாம்கள் உள்ளிட்ட சமூகப் பணிகளுக்கு அவர் வழங்கிய ஒத்துழைப்பும், வழிகாட்டலும் என்றும் நன்றியுடன் நினைவு கூரப்படுகின்றன.


மேலும் அவரது நீண்டகால அர்ப்பணிப்புமிக்க மருத்துவ மற்றும் சமூகச் சேவைகளை மனப்பூர்வமாகப் பாராட்டி, நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், ஓய்வுக்கால வாழ்க்கை உடல்நலம், மனநிம்மதி, குடும்ப மகிழ்ச்சி மற்றும் அல்லாஹ்வின் அருள், பரக்கத் நிறைந்ததாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம்.

(காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பு


34 ஆண்டுகாலம் மருத்துவ பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றார் டாக்டர் அலிமா ரஹ்மான். நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தது காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பு Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 07, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.