நாடகம் பயனில்லை – சட்டம் தப்ப விடாது
சிறைச்சாலையிலோ அல்லது வைத்தியசாலையிலோ எவ்வித நாடகங்கள் நடத்தப்பட்டாலும், சட்டத்தின் பிடியிலிருந்து சுரேஷ் சலே தப்பிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால கடுமையாகத் தெரிவித்துள்ளார்.
அவர் புரிந்த குற்றங்களுக்கு உரிய தண்டனை அவசியம் நிறைவேற்றப்படும் என்றும் , சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய உண்மைகளையும், இரகசியங்களையும் வெளியிடாமல் தொடர்ந்து மறைக்க முற்படுவாரானால், அவர் இரட்டிப்புத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்
மேலும், "சுரேஷ் சலே மட்டுமன்றி, அந்தக் கொடூரத் தாக்குதலுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய அனைவரும் நீதிமன்றத்தின் வழியாக தகுந்த தண்டனை பெறுவதை அரசு உறுதி செய்யும்; குற்றவாளிகள் யாரும் எந்தச் சூழலிலும் சட்டத்திலிருந்து தப்ப முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் .
(sameehazafeer)
நாடகம் பயனில்லை – சட்டம் தப்ப விடாது
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 02, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 02, 2026
Rating:

கருத்துகள் இல்லை: