அன்று இனவாத அரசியல் பேசினார் ; இன்று இறை நீதி; சட்டம் தனது கடமையைச் செய்யட்டும். நீதிமன்றமே இறுதி முடிவை வழங்கும்.
முஸ்லிம் இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று IS*IS பயிற்சி பெற்றதாக நாடாளுமன்றத்தில் முழங்கியவர்… இன்று தனது வீட்டுக்குள்ளே நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லுவார்?
32 முஸ்லிம்கள் IS*IS இல் இணைந்துள்ளனர்… வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெற்றுள்ளனர்… என்று நாடாளுமன்றத்தில் அப்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இவ்வாறு கூறி, நாட்டில் வாழும் முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் சந்தேகத்தின் நிழலை வீசினார்.
மேலும் இவர்கள் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல, உயர்கல்வி கற்ற, உயர்மட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினார்.
அப்போது இலங்கை முஸ்லிம் கவுன்சில், “ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். இனம், மதம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுங்கள். ஆனால் ஒரு சமூகத்தின் மீது ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை சுமத்தாதீர்கள்” என்று வெளிப்படையாகக் கோரியது.
ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கான உறுதியான ஆதாரங்கள் மக்களிடம் ஒருபோதும் வைக்கப்படவில்லை.
ஆனால் இன்று…
ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, விஜயதாச ராஜபக்ஷவின் மகன் போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பணப் பரிமாற்ற விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் சட்டம் தனது கடமையைச் செய்யட்டும். நீதிமன்றமே இறுதி முடிவை வழங்கும்.
ஆனால் ஒரு கேள்வி மட்டும் தவிர்க்க முடியாதது…
நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று என்ன செய்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து கூறியவருக்கு, தனது வீட்டுக்குள்ளே நடந்ததாகக் கூறப்படும் விடயங்கள் மட்டும் தெரியாமல் போனது எப்படி?
முஸ்லிம்களின் வீடுகளில் IS*IS ஐ தேடிய கண்கள், தன் வீட்டின் வாசலை மட்டும் ஏன் பார்க்கவில்லை?
ஒரு முழு சமூகத்தின் மீது சந்தேகத்தை விதைப்பது எளிது. ஆனால் இன்று அதே நீதியும், அதே வெளிப்படைத்தன்மையும், அதே பொறுப்புணர்வும் தனது குடும்பத்தைச் சுற்றியுள்ள கேள்விகளுக்கும் பொருந்த வேண்டாமா?
நேற்று முஸ்லிம்களை விரல் சுட்டியவர்கள்… இன்று தங்களை நோக்கி நீளும் விரல்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது.
ஹிதாயத்_சத்தார்
அன்று இனவாத அரசியல் பேசினார் ; இன்று இறை நீதி; சட்டம் தனது கடமையைச் செய்யட்டும். நீதிமன்றமே இறுதி முடிவை வழங்கும்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 03, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 03, 2026
Rating:

கருத்துகள் இல்லை: