Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கல்முனை ஸாஹிறா மாணவன் எம்.எம். அஸ்மல் தேசிய மட்ட பாடசாலைக்கு இடையிலான பெட்மின்டன் தனிநபர் ஒற்றையர் போட்டிக்குத் தெரிவு


(எம்.எஸ்.எம்.ஸாகிர)திருகோணமலை Mc Heyzer உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான (Eastern Province School Badminton Tournament) போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மாணவன் எம்.எம். அஸ்மல் தனிநபர் ஒற்றையர் போட்டியில் சிறப்பாக விளையாடி 3rd place (2nd Runner Up) பட்டத்தை பெற்று தேசிய மட்ட ஒற்றையர் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவனை வழிப்படுத்தி பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஏ.எம். அப்ராஜ் றிழா, எம்.எச்.எம். முஸ்தன்ஸிர் ஆகியோரை கல்லூரியின் முதல்வர் எம்.ஐ. ஜாபீர் (SLEAS) இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் எஸ். முபாரக், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு (SDEC) மற்றும் பழைய மாணவர்கள் (OBA), பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
கல்முனை ஸாஹிறா மாணவன் எம்.எம். அஸ்மல் தேசிய மட்ட பாடசாலைக்கு இடையிலான பெட்மின்டன் தனிநபர் ஒற்றையர் போட்டிக்குத் தெரிவு Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 04, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.